நிலம் அளக்க பணம் கட்டுவது எப்படி கட்டணம் - முதலில் நிலம் அளத்தல் என்றால் என்ன என்பது பற்றி பார்ப்போம். ஒரு நிலத்தில் பௌண்டரி லைனில் உள்ள அளவீடுகளை அளப்பதே நிலம் அளத்தல் ஆகும். சொல்லப்போனால் இது பெரும்பாலும் கூட்டு பட்டா மற்றும் பாகப்பிரிவினை செய்யும்போது அதிகளவில் நிலம் அளவீடு செய்யப்படுகின்றன.
வட்டாட்சியர் அவர்களிடம் நாம் முதலில் மனு செய்ய வேண்டும். மனு செய்த 90 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட சர்வேயர் உங்கள் நிலத்தினை அளக்க வர வேண்டும். இது நில அளவை சுற்றறிக்கை 15.03.2021 இல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கிராம நத்தம்
மேலும் பக்கத்து நில உரிமையாளர்களுக்கு உரிய நோட்டீஸ் அளித்தல், ஆட்சேபனை இருந்தால் அதற்கு பதில் மற்றும் காவல்துறை பாதுகாப்பு என அனைத்தும் அதில் இடம்பெறும்.
முக்கியமாக ஒரு சந்தேகம் எழும். அது என்னவென்றால் நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் செய்யலாமா வேண்டாமா என்றால் நிச்சயம் சர்வேயரை கூப்பிடலாம். ஏனெனில் தடையாணை மற்றும் இடைக்கால ஆணை மட்டுமே இருந்தால் மட்டுமே நில அளக்க அனுமதி இல்லை. மற்றபடி வழக்குகள் இருந்தால் பிரச்சனை இல்லை என்றே சொல்லலாம்.
இதற்கு கட்டணமாக ரூபாய் 600 வசூல் செய்யப்படுகின்றது. மேலும் ஆன்லைனில் கூட நாம் பணம் கட்டி கொள்ளலாம்.
மேலும் படிக்க: தமிழ்நிலம்