1 காணி நிலம் எத்தனை சென்ட்

1 காணி நிலம் எத்தனை சென்ட் ஏக்கர் ( காணி நிலம் அளவு ) - பண்டைய காலங்களிலும் சரி 90 மற்றும் 20 ம் காலகட்டங்களிலும் சரி நில அளவினை குறிக்கும் சொற்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். வித்தியாசம் என்றும் சொல்லாமல் நடைமுறைக்கு ஏற்றாற்போல் நமது அரசாங்கம் சீரமைத்துள்ளது. அந்த வரிசையில் மா, குழி மற்றும் பல. இவற்றில் காணி என்கிற சொல் தற்போது பழைய பத்திரங்களில் இருக்க வாய்ப்புண்டு.

1 காணி நிலம் எத்தனை சென்ட்


இப்போது ஒரு சென்ட் என்பதை விட சதுர அடியில் கணக்கிட்டு கொள்கிறார்கள். ஆனால் அப்போது ஏக்கர், குழி, காணி, வேலி என நிலத்தினை வரையறுத்து இருக்கிறார்கள். ஏனெனில் அப்போது மக்கள் விவசாயங்களுக்காக நிலங்களை வாங்க துவங்கினர். அது தான் அவர்களின் முழு வேலை என்பதால் ஏக்கர் கணக்கில் வாங்கி பயிர் மற்றும் இதர வேலைகளை அந்த நிலத்தில் செய்தனர். தற்போது ஒரு சென்ட் நிலத்தின் விலை சற்று அதிகமாக சந்தையில் விற்கப்படுகின்றது.

இதையும் படியுங்க: ஒரு ஏக்கர் எத்தனை சதுர அடி

அளவுகள்

1 காணி - 132 சென்ட்

1 காணி - 5422.8 சதுர மீட்டர்

ஒரு காணி - 58370.4 சதுர அடி

ஒரு காணி - 1.32 ஏக்கர், 24 மனை, 4 மா மற்றும் 400 குழி.

மேற்கண்ட நில அளவுகள் காணியை சேர்ந்தது. பழைய மூலப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதன் அளவுகள் மேற்கண்டவாறு நாம் தீர்மானித்து கொள்ளலாம்.

இதையும் படியுங்க: ஒரு டிரில்லியன் என்பது எத்தனை கோடி