1 சதுரம் எத்தனை square feet

1 சதுரம் எத்தனை square feet ( சதுர அடி ) அல்லது ஒரு சதுரம் என்றால் எத்தனை அடி ( 1 sathura adi equal to square feet ) - முதலில் சதுரம் வேறு சதுர அடி வேறு மற்றும் சதுர மீட்டர் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் இந்த மூன்றும் ஒன்றே என்று நினைத்து கொள்கிறார்கள். மேற்கண்ட மூன்று அளவுகளும் பெரும்பாலும் வீடு, கட்டிடங்கள் மற்றும் புதியதாக நிலங்கள் அல்லது மனையை வாங்குவதற்கு உபயோகப்படுத்துவார்கள். இதில் அதிகமாக நாம் பயன்படுத்தும் முறை மற்றும் வார்த்தை என்னவென்றால் அது சதுர அடி மட்டுமே. என்னதான் நாம் புதிதாக இடங்கள் வாங்கினால் முதலில் நாம் பயன்படுத்தும் முறை சென்ட் மற்றும் சதுர அடியே. அதிகமான பரப்பு கொண்ட நிலத்தை அல்லது மனைகளை வாங்கினால் அங்கு சென்ட் என்கிற வார்த்தையும்  குறைவான நிலத்தினை மற்றும் மனையை வாங்க நேர்ந்தால் அங்கு நாம் உபயோகப்படுத்தும் முதன்மை வார்த்தை சதுர அடி ஆகும்.

1 சதுரம் எத்தனை square feet


சதுரம் என்றால் நான்கு பக்கமும் ஒரே அளவினை கொண்டு இருக்கும். ஆனால் நாம் வாங்கும் நிலங்கள் நான்கு பக்கங்களும் வேறு வேறு அளவுகள் மட்டுமே காணப்படும். சதுரத்தின் துல்லியமான அளவுகளை நீளம் மற்றும் அகலம் இவற்றினை பெருக்கினால் வரும் விடை தான் சதுரம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் ஸ்கோயர் என்று அழைப்பார்கள்.

நில அளவுகள்

1.1 சதுரம் என்பது 100 சதுர அடியாகும்.

2. ஒரு சதுர அடி 0.0929 சதுர மீட்டர்.

3. ஒரு அடி என்பது 304.88 mm.

4. 3.28 அடி 1 மீட்டர்.

5. ஒரு சதுர மீட்டர் 10.76 சதுர அடியாகும்.

6. 5 சதுரம் எத்தனை சதுர அடி - 500.

இதையும் பார்க்க: சதுர மீட்டர் to சென்ட் calculator