12 மாதங்களின் தமிழ் பெயர்கள், தமிழ் மாதங்கள் எத்தனை

12 மாதங்களின் தமிழ் பெயர்கள், தமிழ் மாதங்கள் எத்தனை - பொதுவாகவே இன்றைய கால கட்டத்தில் அனைவரும் அறிந்த மாதங்கள் என்றால் ஜனவரி முதல் டிசம்பர் வரையும் தான். ஆனால் ஒரு சிலருக்கு தமிழ் மாதங்கள் இருப்பதே தெரியாது. ஒரு சிலருக்கு தமிழ் மாதங்கள் என்னென்ன அடிப்படையில் இருக்கிறது என்றும் தெரியாது. முதலில் நாம் தமிழ் மாதம் அடிப்படையில் தான் வாழ்ந்து வந்தோம். நாளடைவில் அது ஆங்கில மாதங்களாக நடைமுறைக்கு வந்தது. இன்றும் நாம் ஆங்கில மாதம் தான் எங்கு சென்றாலும் உபயோகிக்கிறோம்.

12 மாதங்களின் தமிழ் பெயர்கள்


தமிழ் மாதங்கள் எத்தனை List

தமிழ் மாதங்கள் மொத்தமாக பன்னிரெண்டு இருக்கிறது. ஆங்கில மாதங்கள் போன்றே தமிழ் மாதங்களும் பன்னிரெண்டு இருப்பது குறிப்பிடத்தக்கதே. தமிழ் மாதங்கள் பெயர் வர காரணம் நம் முன்னோர்கள் வானிலை மற்றும் அதனை சார்ந்த முயற்சிகளில் ஈடுபட்டதால் இத்தகைய பெயர் வர காரணமாக அமைந்தது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் ராசிகள் அடிப்படையில் தான் இந்த பெயர்களும் வந்தன.

தமிழ் மாதங்கள் 2022

தை - மகரம்

மாசி - கும்பம்

பங்குனி - மீனம்

சித்திரை - மேடம்

வைகாசி - இடபம்

ஆனி - மிதுனம்

ஆடி - கடகம்

ஆவணி - சிங்கம்

புரட்டாசி - கன்னி

ஐப்பசி - துலாம்

கார்த்திகை - விருச்சிகம்

மார்கழி - தனு

மேலே குறிப்பிட்டுள்ள மேடம் - மேஷம், இடபம் - ரிஷபம், தனு - தனுஷ் எனவும் வாசகர்கள் எடுத்து கொள்ளலாம். இந்த ராசிகள் வடமொழி கலந்ததாக இருக்கின்ற காரணத்தினால் அந்த எழுத்தை மட்டும் தூக்கிவிட்டு தூய தமிழில் இங்கே அப்டேட் செய்துள்ளோம்.

தூய தமிழ் மாதங்கள்

தூய என்கிற வார்த்தைக்கு உண்மையான மற்றும் செந்தமிழ் என்று அழைக்கலாம். சுறவம், கும்பம், பங்குனி, சித்திரை, விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி மற்றும் சிலை இவைகள் எல்லாம் தூய தமிழ் மாதங்களாக கருதப்படுகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள சுறவம் முதல் சிலை வரிசைகள் நடைமுறையில் உள்ள தமிழ் மாதங்களான தை முதல் மார்கழி வரை வரிசையாக அப்டேட் செய்திருக்கிறோம்.

தமிழ் டு ஆங்கிலச் ற்றன்ச்லடின்

தமிழ் நகைச்சுவை விடுகதைகள்