2000 உதவித்தொகை பெற விண்ணப்பம் - தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல ஊக்கத்தொகைகள் மற்றும் உதவித்தொககளை மக்களுக்கு செய்து கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந்த 2000 ரூபாய் உதவித்தொகையினை அரசாங்கம் இரு வழிகளில் கொடுத்து வருகின்றது. ஒன்று வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் இன்னொன்று அமைப்புசாரா தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை ஆகும்.
வறுமை கோட்டிற்கு கீழ் பெறப்படும் உதவித்தொகை
பிப்ரவரி 02, 2019 அன்று தமிழ்நாடு அரசு ஒரு புதிய உதவித்தொகையினை கொடுக்க அரசாணை ஒன்றினை பிறப்பித்தது. அதில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு நிதியுதவியாக ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதில் 60 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றார்கள். நகராட்சி மற்றும் கிராம புறங்களில் என வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இந்த 2000 ரூபாய் அரசாங்கம் வழங்கியது. இதனை தமிழ்நாடு ஊராட்சி துறை செயல்படுத்தியது. தற்போது இந்த திட்டம் இல்லை. ஆனால் பின்னாட்களில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையும் பார்க்க: கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உதவித்தொகை விண்ணப்பம்
அமைப்புசாரா வாரியத்தின் மூலம் கிடைக்கும் உதவித்தொகை
அமைப்புசாரா வாரியம் மூலம் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை பெறலாம். முதலில் உதவித்தொகை பொறுத்தமட்டில் மேற்படிப்புக்கு ரூபாய் 5000 முதல் 12, 000 ரூபாய் வழங்கப்படும். இந்த உதவித்தொகை நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பினை பொறுத்தே. இரண்டாவதாக கல்வி ஊக்கத்தொகை ரூபாய் 2000 முதல் 3000 வழங்கப்படும். தமிழ்நாட்டில் 10 ம் மற்றும் 12 ம் அரசு தேர்வில் முதல் 10 மதிப்பெண்களுக்குள் இருந்தால் 2000 முதல் 3000 ரூபாய் வரையும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு மாணவரின் பெற்றோர்கள் அமைப்புசாரா வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
இதையும் பார்க்க: நலவாரிய அட்டை பதிவு