விரைவு விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் - மின்சார வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை வாரியம் 1976 இல் இருந்து இந்த திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. அப்போது தண்ணீர் எடுக்கும் போர் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்று சட்டம் இருந்தது. ஆனால் தற்போது இல்லை.
புதிய விவசாயி மின் இணைப்பு பெற தேவையான ஆவணங்கள்
புதிதாக மின் இணைப்பு வாங்க ஒருவருக்கு 50 சென்ட் நிலம் இருப்பது அவசியமாகும். முன்பு எல்லாம் ஏகப்பட்ட ஆவணங்களை நாம் சப்மிட் செய்து கொண்டு இருந்தோம். உதாரணமாக வில்லங்கம், பட்டா, சிட்டா, புலப்படம் இவை இணைத்தும் தர வேண்டும். ஆனால் தற்போது லேண்ட் டாக்குமெண்ட்ஸ் மற்றும் கிணற்றின் சான்று.
புதிய மின் இணைப்பு விண்ணப்பம் PDF
VAO கிணற்று சான்று
இப்போது ஒரு விவசாயி புதிதாக மின் இணைப்பு பெற கிணறு அவசியம். அந்த கிணறு கூட்டாக இருந்தால் நீங்கள் அந்த கிணறு என்னுடையது அல்லது எனக்கும் பங்கு இருக்கிறது என்று கிராம நிர்வாக அலுவலகரிடம் ஒரு சான்று வாங்க வேண்டும். முன்பு எல்லாம் கூட்டு பட்டா மற்றும் அவர்களிடம் தனி தனி கையொப்பம் இடுதல் அவசியம். நடைமுறையில் உங்களுக்கு அதில் இடம் உரிமை இருந்தால் போதுமானது.
ஒரு சர்வே நம்பரில் 2 கிணறு இருந்தால் தனி தனி மின் இணைப்பு வாங்க முடியும். இதில் ஏற்படும் செலவுகள் அனைத்தும் விவசாயி மற்றும் நுகர்வோர் தான் பணம் செலுத்த வேண்டும். உதாரணமாக கம்பம், லைன் இவை அனைத்தும் நாம் தான் செலவு செய்ய வேண்டும். VAO இடம் நீங்கள் கொடுக்கும் அல்லது எழுதி தரும் கிணற்று சான்றில் எனக்கு கிணற்றில் பங்கு இருக்கிறது நான் வேறு எந்த காரணங்களாகவும் மிஸ் யூஸ் செய்ய மாட்டேன் என்று அதில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு 1
ஒருவர் 50 சென்டில் மின் இணைப்பு வாங்குகிறார். கிணற்றில் இரண்டு பேருக்கு உரிமை இருக்கிறது என்றால் இருவரும் தனி தனி மின் இணைப்பு வாங்கலாம்.
எடுத்துக்காட்டு 2
ஒருவரிடம் மின் இணைப்பு உள்ளது. ஆனால் அவர் பிற வேலைகளுக்கு உபயோகப்படுத்தலாமா. நிச்சயமா வேறு சில வேலைகளுக்கு உபயோக படுத்த கூடாது. அவர் விற்பனை அல்லது வீட்டிற்கு உபயோகப்படுத்தினால் சட்டப்படி குற்றமாகும். அதனால் தனி தனியாக மின் இணைப்பு வாங்கி உபயோகப்படுத்தலாம்.
படிவம் எங்கு கிடைக்கும்
படிவம் ஆன்லைனில் அல்லது மின்சார வாரியத்திற்கு சென்றும் கூட நாம் வாங்கலாம். ஆன்லைனில் படிவம் இருக்கிறது. அதனை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து உங்கள் ஏரியா AE யை காண்டாக்ட் செய்யுங்கள்.