50, 100 ரூபாய் பத்திரம் மதிப்பு 2024

50, 100 ரூபாய் பத்திரம் மதிப்பு - 100 ரூபாய் பத்திரம், 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் பத்திரங்கள் எல்லாம் கடன் உறுதி சீட்டிற்காக மக்கள் பெரிதளவில் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதில் எப்படி நிரப்ப வேண்டும், எவ்வளவு கொடுக்கலாம், எத்தனை வருடங்கள் காலாவதி ஆகும் என்றெல்லாம் மக்கள் அறிவதில்லை.

100 ரூபாய் பத்திரம் மதிப்பு


ஒருவர் மற்றொருவருக்கு கொடுக்கின்ற கடனை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு ஆவணமாக இது இருக்கிறது. நீதிமன்ற சாராத ஸ்டாம்ப் பேப்பரை பயன்படுத்தி நாம் தொகையை எழுதி கொள்ளலாம். மாத மாதம் கொடுக்கின்ற வட்டி, முதல்  பணம் எல்லாம் அதில் எழுதி வைக்க வேண்டும். ஆறு மாதம் முதல் மூன்று வருடங்களுக்குள்ளாகவே கடன் தொகையை வாங்கியிருக்க வேண்டும்.

கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி

முழு பணம் கொடுத்த பின்னர் அந்த பத்திரத்தை உரியவரிடம் கொடுக்க வேண்டும். கொடுக்காவிட்டால் நிச்சயம் கேட்டு வாங்கி கொள்ளவும் அல்லது தொலைந்து விட்டதென்றால் இன்னொரு ஸ்டாம்ப் பேப்பரை வாங்கி அதில் கடன் கொடுத்தவர் பழைய பத்திரம் தொலைந்து விட்டதென்றும் மற்றும் மற்ற விவரங்களை எழுதி கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும்.

தந்தை சொத்து யாருக்கு