ஆதார் அட்டை பெயர் திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள் அல்லது திருத்தம் செய்வது எப்படி - இன்றைக்கு ஆதார் கார்டு ஒரு சிறந்த ஆவணமாக கருதப்படுகின்றது. அதே சமயத்தில் அடையாளம் மற்றும் முகவரிக்கு ஏற்ற ஆவணமாக கருதப்படுகின்றது. ஆதார் அட்டையில் வரும் பெயரில் தவறு ஏற்பட்டு இருந்தால் அதனை எளிமையான முறையில் திருத்தம் செய்து கொள்ளலாம்.
குறிப்பு
பெயரை திருத்தம் செய்வதற்கு ஏதாவது ஒரு ஆவணம் தேவை. ஆனால் அந்த ஆவணத்தில் திருத்தம் செய்யப்படுகின்ற பெயர் சரியாக இருக்க வேண்டும். 35 க்கும் மேலான ஆவணங்களை அடையாளம் மற்றும் பெயரை மாற்றுவதற்கு பயன்படுத்தலாம். அவற்றில் அதிகமாக உபயோகித்து பெயரை திருத்தம் செய்த ஆவணங்களை கீழே காணலாம்.
இதையும் பார்க்க: ஆதார் அட்டை முகவரி திருத்தம் செய்ய
1. பான் கார்டு
2. வோட்டர் ஐடி
3. Pds ரேஷன் கார்டு
4. கேசட் பெயர்
5. பாஸ்போர்ட்
6. பேங்க் ஏ டி எம் கார்டு
7. RSPY கார்டு
8. டிரைவிங் லைசென்ஸ்
9. பென்ஷன் போட்டோ கார்டு
10. கிசான் பாஸ்புக்.
மேற்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றினை வைத்து உங்கள் பெயரை திருத்தி கொள்ளலாம். திருத்தம் செய்யும் பெயர் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டு அது ஒரு ஆவணமாக அல்லது அடையாள ப்ரூப் ஆக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அப்படி ஆவணம் ஏதும் இல்லை என்றால் ஆதார் பொது சேவை மையத்தில் ஒரு விண்ணப்ப படிவம் வாங்கி கொள்ளுங்கள். அந்த விண்ணப்பத்தை அவர்கள் சொல்லும் வழிமுறையை பின்பற்றி திருத்தம் செய்து கொள்ளுங்கள்.
இதையும் பார்க்க: ஆதார் அட்டை தொலைந்தால்