ஆதார் அட்டை நிலவரம், ஆதார் அட்டை விண்ணப்ப படிவம் - ஆதார் கார்டின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடையாது. நாம் நேரில் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும். CSC மையம், வங்கியில் செயல்பட கூடிய மையம் அல்லது தாலுகா ஆஃபிஸில் செயல்படக்கூடிய மையங்களில் ஏதாவது ஒரு மையத்தினை அணுகி புதிதாக அட்டையை பெற்று கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் அடையாள அட்டையும் மற்றும் 35 வகையான முகவரிக்கான சான்றிதழ்களை எடுத்து கொண்டு செல்லலாம். உங்கள் பத்து விரல்களின் கை ரேகை, புகைப்படம் மற்றும் இரண்டு கருவிழி படங்கள் என அனைத்தும் எடுத்து கொள்வார்கள். இதற்கான கட்டணம் முற்றிலும் இலவசம் ஆகும்.
மொத்தமாக சொன்னால் மூன்று மாதங்களில் உங்கள் ஆதார் வந்து விடும். அதிகபட்சமாக மூன்று மாதங்கள் குறைந்த பட்சமாக ஒரு மாதம் தேவைப்படும். அப்படி உங்கள் ஆதார் நிலவரத்தை தெரிந்து கொள்ள ஒரிஜினல் போர்டல் சென்று செக் ஆதார் ஸ்டேட்டஸ் என்று கொடுத்தால் உங்கள் மொபைல் எண் கேட்கும். அப்படி உங்கள் எண் கொடுக்கும் நேரத்தில் அது எந்த நிலைமையில் உள்ளது என்று துல்லியமாக காட்டும்.
இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆதார் அட்டையின் திருத்தம் அல்லது ஏதாவது ஒரு காரணங்களுக்காக மாற்றம் செய்திருந்தால் ஒரு மாதத்திற்கு மேலாக ஆகி விடும். அதனால் மக்கள் சற்று பொறுமை காத்து இருத்தல் அவசியம். எந்த வித நிலவரம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் உங்கள் ஆதார் எண் லாகின் செய்தால் மட்டுமே நிலவரத்தினை காட்டும்.
நீங்கள் மின்னஞ்சல் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் கொடுத்தால் பின்னாளில் மொபைல் நம்பர் தொலைந்தால் இந்த மின்னஞ்சல் மூலமாக புதிதாக தொலைபேசி எண்களை நம்மால் இணைக்க முடியும். ஒரு சில பயனாளர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆதாரில் மின்னஞ்சல் கொடுக்க வில்லை என்றால் அப்டேட் செய்து கொள்ளுங்கள். இதற்காக வேறு எந்த சென்டர் அணுக தேவை இல்லை. நாமாகவே இதனை அப்டேட் செய்துக்கொள்ளலாம்.