ஆதார் கார்டு எடுக்க தேவையான ஆவணங்கள்

ஆதார் கார்டு எடுக்க தேவையான ஆவணங்கள் - ஆதார் அட்டை அல்லது கார்டு தற்போது அனைத்து இடங்களிலும் உபயோகப்படுகின்றது. மின்சார அட்டை முதல் குடும்ப அட்டை வரை அனைத்திலும் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்படுகின்றது.

முதலில் வாக்காளர் அட்டை முகவரி சான்றுக்கும் அடையாள சான்றுக்கும் நாம் அதிகமாக பயன்படுத்தி இருந்தோம். தற்போது வாக்காளர் அட்டையுடனேயே ஆதாரை இணைக்க அரசாங்கம் கூறி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஆதார் கார்டு எடுக்க தேவையான ஆவணங்கள்


19 வகையான அடையாள அட்டைகள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட முகவரி சான்றினை ஏதாவது ஒன்றினை சமர்ப்பிக்கலாம். 90 நாட்களுக்குள் அப்ளை செய்த ஆதார் அட்டை உங்கள் முகவரிக்கு வந்து விடும். திருத்தம் செய்ய நேர்ந்தால் 96 மணி நேரத்திற்குள் செய்யலாம்.

இதையும் பார்க்க: பான் கார்டு அப்ளை செய்வது எப்படி

மேற்கண்ட முகவரி சான்றும் அடையாள அட்டை சான்றும் எதும் இல்லையென்றால் உங்கள் குடும்ப அட்டை பயன்படுத்தி கொள்ளலாம். அதில் விண்ணப்பதாரர் பெயர் இருக்க வேண்டும். மேலும் குடும்ப தலைவரிடம் கட்டாயம் முகவரி மற்றும் அடையாள அட்டை இருத்தல் அவசியமாகும்.

இதையும் பார்க்க: ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்ப்பது எப்படி