ஆதார் அட்டை முகவரி திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள் ( aadhar card address change online tamil ) - ஆதாரை திருத்தம் செய்வதற்கு எளிமையான முறையில் வீட்டில் இருந்தபடியே எவ்வாறு செய்வது அல்லது மாற்றம் செய்வது என்பதை பார்ப்போம். மொத்தமாக ஆதாரில் நாம் ஏகப்பட்ட விஷயங்களை மாற்ற அல்லது திருத்தம் செய்ய நிலைமை ஏற்படுகிறது. உதாரணமாக தொலைபேசி எண், பெயர், முகவரி, பிறந்த தேதி, தந்தை பெயர் மற்றும் புகைப்படம் இவையெல்லாம் மாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஆதார் அட்டையில் திருத்தம் செய்யக்கூடிய ஆவணங்கள் மற்றும் கட்டணம் ( ஆதார் சேவை மையத்திற்கு செல்லாமல் )
அவற்றை சரி கட்டவே மத்திய அரசு மக்கள் வீட்டில் இருந்தபடியே திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி, தொலைபேசி எண், புகைப்படம் இவைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் அப்டேட் செய்து கொள்ளலாம். இதற்காக நாம் செலுத்தும் கட்டணம் ரூபாய் 50 ஆகும். இதில் பெயர் இரண்டு முறையும், பிறந்த தேதி ஒரு முறையும் மாற்றி கொள்ள முடியும். அவற்றிற்கு மேலே அப்டேட் உங்கள் வாழ்நாளில் எப்போதும் செய்ய முடியாது.
அதனால் இந்த இரண்டும் அப்டேட் செய்யும்போது நிதானமாகவும் கவனம் செலுத்திய பிறகு உங்கள் ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் திருத்தங்கள் செய்யும்போது உங்கள் ஆதார் 15 நாட்களுக்குள் அப்டேட் ஆகி இருக்கும். ஆனால் அட்டை வருவதற்கு 15 நாட்களுக்கு மேல் தான் உங்கள் முகவரிக்கு வரும் என்பதை புரிந்து வேண்டும்.
ஆவணங்களாக 50 க்கு மேல் இருக்கிறது அதிலிருந்து நாம் ஒன்றை தேர்ந்து எடுக்க வேண்டும். அட்ரஸ் சேன்ஜ் செய்யும்போது நீங்கள் கொடுக்கும் ஆவணங்களில் அட்ரஸ் சேன்ஜ் ஆகி இருக்க வேண்டும். இல்லையென்றால் ரிஜெக்ட் செய்து விடுவார்கள். உதாரணமாக வீட்டு வரி, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் எல்லாம் முகவரி மாற்றம் செய்வதற்கு உகந்த ஆவணங்களாகும். கிட்டத்தட்ட வெறும் பத்து நிமிடங்களில் திருத்தம்செய்து விடலாம். Uidai சென்று லாகின் செய்து டெமோகிராபிக்ஸ் செலக்ட் செய்தால் நீங்கள் எதனை மாற்ற விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்து மாற்றி கொள்ளவும்.