ஆதார் முகவரி மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள் - நம்மிடம் இருக்கும் ஆதாரில் முகவரியை மாற்ற மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதற்காக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஏனென்றால் அட்ரஸ் என்பது நமது இருப்பிடத்தினை காட்டும். அது மட்டுமில்லாமல் உங்கள் அட்ரெஸ்க்கு ஏதாவது கொரியர் வந்தோலோ அல்லது ஆவணங்கள் மற்றும் இதர டாக்குமெண்ட்ஸ் வந்தோலோ சரியான அட்ரஸ் இருந்தால் தான் வரும்.
ஆதார் கார்டு முகவரி திருத்தம் செய்ய
அதனால் மக்கள் அதிகபட்சமாக கொடுப்பது இந்த ஆதார் கார்டை தான். அவ்வாறு இருக்கும் நேரத்தில் அதில் கொடுக்கின்ற முகவரிகள் மாற்றம் இருந்தாலோ அல்லது திருத்தம் இருந்தாலோ உடனடியாக மாற்ற வேண்டும். முன்னர் எல்லாம் ஆதார் சென்டர்க்கு சென்று நமது அட்ரஸ் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். ஆனால் தற்போது எளிய முறையில் நாம் வீட்டில் இருந்தபடியே முகவரியை அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆதார் அட்டை முகவரி ஆவணங்களை மாற்றுகிறது
கிட்டத்தட்ட பதினாறு வகையான ஆவணங்கள் மூலம் உங்கள் அட்டைக்கான முகவரியை மாற்றம் செய்து கொள்ளலாம். ஆனால் முக்கியமாக நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஆவணங்களின் முகவரி சரியாய் இருத்தல் அவசியம்.
1. வோட்டர் ID
4. வாட்டர் பில்
5. கரண்ட் பில்
6. சொத்து வரி
மேற்கண்ட ஆவணங்கள் இல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட டாக்குமெண்ட்ஸ் Uidai வில் நீங்கள் அப்லோட் செய்யலாம். இதற்காக அரசு தரப்பில் ரூபாய் 50 வசூல் செய்யப்படுகிறது. மேலும் இதனை முடித்த பின்னர் உங்கள் ஆதார் முகவரி ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அப்போது உங்கள் முகவரி மாற்றிவிட்டால் உடனடியாக அட்டைகளை மாற்றி கொள்ளுங்கள். பிவிசி அட்டைக்காக ரூபாய் 50 கட்டணங்கள் வசூல் செய்யப்படும். மொத்தமாக 100 ரூபாய் செலவிலேயே முடிந்து விடும். எதற்காக இந்த அட்டையை மாற்ற வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் ப்ரூப் ஆக எங்காவது கொடுக்க நேர்ந்தால் பழைய அட்டையில் பழைய முகவரி தான் இருக்கும். அதனால் முகவரி சேன்ஜ் ஆன உடனேயே புது அட்டைக்காக விண்ணப்பித்து வாங்கி கொள்ளுங்கள். ஒருவேளை ரிஜெக்ட் செய்திருந்தால் வேறு ஒரு ஆவணத்தை உடனேயே அப்லோட் செய்யலாம். இதனால் நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் பதினாறு வகையான ஆவணங்கள் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு தான் செலக்ட் ஆக வாய்ப்பில்லை. மொத்தமும் ரிஜெக்ட் ஆக வாய்ப்பில்லை என்பதால் அடுத்த ஆவணத்தை எவ்வித தயக்கமும் இன்றி அப்லோட் செய்யுங்கள்.
பட்டா சிட்டா