ஆமணக்கு சந்தை விலை 2024 - இதனை கொட்டைமுத்து அல்லது முத்துக்கொட்டை என்றும் நாம் கூறலாம். மொத்தமாக மூன்று வகையான ஆமணக்கு வகைகள் உள்ளது. ஆமணக்கின் விளைச்சல் எப்போதுமே அதிகமாக கிராம புறங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு வரை அறுவடை செய்யப்படுகிறது. இதன் விளைச்சல் அதிகமாக உள்ள காரணத்தினால் விவசாயிகள் ஏக்கர் கணக்கில் பயிரிட்டு பயன்பெறுகிறார்கள்.
இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள வேர்கள், விதைகள் மற்றும் இலைகளை மருத்துவ பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம். உதாரணமாக விதைகளை கொண்டு விளக்கெண்ணெய் தயார் செய்து கொள்ளலாம். இலைகளை கொண்டு கை கால் வீக்கம், தலைமுடி உதிர்வு போன்றவைகளை குறைக்க முடியும். இதனை தவிர்த்து உடல் உஷ்ணம், கண் சார்ந்த நோய்களுக்கு உபயோகிக்கலாம்.
இன்றைய மிளகாய் வத்தல் விலை 2024
தற்போது உள்ள சந்தை விலை எவ்வளவு என்றால் 60 லிருந்து 65 ரூபாய் வரையும் விவசாயிகளுக்கு தருகிறார்கள். ஆனால் மக்களுக்கு இதன் விலை 5 முதல் 10 ரூபாய் வரையும் ஏறிக்கொண்டே இருக்கும். இப்போது உள்ள சூழ்நிலையில் ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் 50, 000 ரூபாய் வரையும் லாபம் எடுக்கிறார்கள்.
தக்காளி விலை இன்று