ஆட்சேபனை மனு மாதிரி

ஆட்சேபனை மனு மாதிரி - இதனை ஆங்கிலத்தில் Objection Petition என்று சொல்லலாம். இந்த வார்த்தையிலே அர்த்தம் உள்ளது. உதாரணமாக பட்டா அல்லது பத்திரம் ஒருவர் போலியாக தயாரித்து அதனை மாறுதல் செய்கிறார் என்றால் அந்த நேரத்தில் நிலத்தின் அல்லது மனையின் உரிமையாளர் அவர்கள் நிச்சயமாக ஆட்சேபனை சான்றிதழை அல்லது மனுவினை  கொடுக்க வேண்டும்.

ஆட்சேபனை மனு மாதிரி


பட்டா மாறுதல் உங்களுடைய நிலத்திற்கு ஒருவர் செய்யும் நேரத்தில் உங்களுக்கு தெரியுமேயானால் அந்த நிலத்தின் உரிமையாளர் உரிய ஆவணங்கள், ஆட்சபனை மனு, ஒப்புகை சீட்டு ஆகியவைகளை இணைத்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர்களுக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

இதையும் படியுங்க: முதலமைச்சரின் உதவி மையம் உங்கள் கோரிக்கை எண்

பட்டா மாறுதல் செய்ய வேண்டுமா அல்லது செய்ய வேண்டாமா என்று கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவார். இருதரப்பினர்களும் விசாரணைக்கு வரும் சூழல் ஏற்படும். ஒருவேளை உங்களுக்கு அதில் திருப்தி இல்லை என்றால் மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது கோட்டாட்சியர் அவர்களுக்கு மேற்கண்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: நிலம் அளக்கும் முறை

அங்கேயும் உங்களுக்கு பதில் திருப்தி இல்லை என்றால் அந்த போலியான நபர் மீது சிவில் நீதிமன்றம் அல்லது உரிமை நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்க வேண்டும்.

இதையும் படியுங்க: நில அபகரிப்பு சட்டம் Pdf