ஆவண எண் என்றால் என்ன

ஆவண எண் என்றால் என்ன தமிழ் - ஆவணம் என்றால் டாக்குமெண்ட் என்பர். ஒரு சொத்தின் உரிமையை அல்லது உறுதிப்படுத்த ஒரு ஆவணம் என்பது கட்டாயமே.  வகையில் ஆவணம் என்பது ஒரு நிலையான ஒரு சொத்தின் அடையாளத்தை காட்டக்கூடிய ஒன்றாகும்.

ஆவண எண் என்றால் என்ன


பட்டா மற்றும் பத்திரம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களிலும் இது தென்படும். உதாரணமாக பட்டாவில் பட்டா எண் ஒன்று இருக்கும். அதனை வைத்து இன்னார் தான் சொத்தின் உரிமையாளர் என்று நாம் தீர்மானித்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு நில அளவை ஆவணம் பட்டா

அதேபோல் பத்திரத்திலும் ஆவண எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் ஆவண எண் ஒன்று சொன்னால் அது பத்திரத்தை தான் குறிக்கும். பத்திரத்தில் சொத்து விபரம் என்கிற பக்கத்தில் இது காணப்படும். உதாரணமாக 243/2023 என்று சொத்தில் காணப்படும். அப்படி தெரியாதவர்கள் அல்லது நகல் பத்திரம் இல்லாதவர்கள் சர்வே எண்ணை வைத்து வில்லங்கம் போட்டு பார்த்தால் அதிலேயே தெரிந்துவிடும்.

பவர் பத்திரம் என்றால் என்ன