அங்கீகாரம் அற்ற மனை பிரிவுகளை கிரயம் செய்யும் முறை

அங்கீகாரம் அற்ற மனை பிரிவுகளை கிரயம் செய்யும் முறை ( அனுமதியற்ற மனைப்பிரிவு ) - வீடோ அல்லது கட்டிடங்களோ கட்டுவதற்கு முன்னர் அங்கீகாரம் தேவை. அதாவது அந்த இடத்திற்கு டிடிசிபி அப்ரூவல் கட்டாயம் வேண்டும். ஏனெனில் அந்த இடத்திற்கு போதுமான அளவு வெளிச்சம், கட்டிட அளவு, சாலை நீளம், குடிநீர் வசதி மற்றும் இதர அரசு பயன்பாடுகள், அளவுகள் சரியாக இருப்பதற்காக இந்த அப்ரூவல் தற்போது கட்டாயமாக்கப்படுகிறது.

அங்கீகாரம் அற்ற மனை பிரிவுகளை கிரயம் செய்யும் முறை


இதற்கு மேல் எந்த ஒரு மனை பிரிவும் டி டி சி பி அப்ரூவல் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறை கூறியுள்ளது. 2016 க்கு முன்னர் தெரியாமல் கிரயம் செய்ய  மனை பிரிவுகள் மட்டும் வரன்முறைப்படுத்த சில கால அவகாசம் அரசாங்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பார்க்க: புறம்போக்கு நிலத்தில் பாதை

பழைய மனை பிரிவுகள் வரன்முறை படுத்தவில்லை எனில் சம்பந்தப்பட்ட டி டி சி பி அலுவலகத்தில் நேரில் சென்று கேட்கவும். இதற்கு பிறகு தான் கிரயம் செய்ய முடியும். மேலும் மனை பிரிவுகளுக்கு அப்ரூவல் வாங்கிவிட்டாலும் கட்டும் கட்டிடத்திற்கு நிச்சயம் அனுமதி வாங்கிய பின்னர் தான் கட்ட வேண்டும்.

இதையும் பார்க்க: ஒரு இடத்தை வாங்கும் போது பெற வேண்டிய ஆவணங்கள்