அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வது எப்படி - அங்கீகாரம் இல்லாத மனை வரன்முறை என்றால் வரைபடம் படி அந்த இடத்தில் ஒப்புதல் வாங்காமல் இருத்தல் ஆகும். எப்படி பதிவுத்துறையில் ஒரு பத்திரத்தை பதிவு செய்தால் தான் உரிமையாளர்க்கு அந்த சொத்து உரிமை கொண்டாட முடியுமோ அதேபோல் தான் இந்த மனைவரன் திட்டமும் ஆகும். இதனை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அந்தளவு இல்லை என்றே கூறலாம்.
25.01. 2021 அன்று வந்த அரசாணை படி, 20.10.2016 க்கு பிறகோ அல்லது அதற்கு முன்னரோ தெரியாமல் அல்லது அங்கீகாரம் இல்லாத மனைகள் இருக்குமாயின் அதற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அதனை முடிக்க கால அவகாசம் 03.11.2017 வரையும் உள்ளது என்றும் அதில் கூறியிருந்தது. பின்னாட்களில் அதனை 16.11. 2018 வருடமும் மற்றும் 28.02. 2021 நாட்களுக்குள் முடிக்க மேலும் நேரம் கொடுத்திருந்தது தமிழ்நாடு அரசு.
மனை வரன்முறை திட்டம் 2023
அனுமதியற்ற மனைப்பிரிவு
1. முதலில் மனையை வாங்கும்போதே அந்த இடத்திற்கு டி டி சி பி அல்லது சி எம் டி ஏ ஒப்புதல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
2. பிறகு ஒப்புதல் வாங்கி விடலாம் என்று அஜாக்கிரதையாக இருக்க கூடாது. பின்னாளில் அந்த இடத்திற்கு ஒழுங்கான வரன்முறை இல்லாத காரணத்தினால் அந்த இடம் ஆக்கிரமிப்பு அல்லது அகற்ற வாய்ப்புள்ளது.
3. தெரியாமல் உங்களுக்கு விற்று விட்டார்கள் என்றால் சம்மந்தப்பட்ட டி டி சி பி அலுவலத்திற்கு சென்று கேட்கலாம். அவர்கள் அதற்கு முறையான சொலுஷன் சொல்வார்கள்.
4. தற்போது பதிவு துறையில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்ய மாட்டார்கள். இருப்பினும் ஒருவேளை நீங்கள் வாங்கிய மனைகளுக்கு ஒப்புதல் இல்லையென்றால் உங்கள் மாவட்டத்தில் உள்ள டி டி சி பி அலுவலகத்திற்கு செல்லலாம்.
கிராம பஞ்சாயத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி