அண்ணன் தம்பி பாகப்பிரிவினை - பொதுவாக ஒரு வீட்டில் நடக்கும் பாதி பிரச்சனை இந்த சொத்து ஆகும். அந்த சொத்தானது மூன்று விதமாக பிரிக்கப்படும். ஒரு தனிப்பட்ட நபரிடம் சொத்து வருவது இரண்டு வழிகளில் தான் ஒன்று சுயமாக சம்பாதித்த சொத்து இன்னொன்று பூர்வீக சொத்து.
1. உயில்
2. வாரிசு அடிப்படையில் சொத்து வருவது
3. பாகப்பிரிவினை மூலம் சொத்து வருவது
இந்த மூன்று விதமான சொத்துக்கள் அடிப்படையில் தான் சொத்து அவர்கள் கைக்கு போகும்.
கேள்வி 1
ஒருவர் தனது சொத்தை மகன், மகள், பேத்தி, பேரன் மற்றும் மனைவி இவர்களில் ஒருவருக்கு உயில் எழுதி கொடுக்கிறார் என்றால் அந்த சொத்தை சொந்த மகனும் மகளும் கண்டிப்பாக பெற முடியாது. ஒருவேளை மகன் அல்லது மகள் பெயருக்கு சொத்தை எழுதி வைத்தார் என்றால் பிரச்சனை இல்லை.
கேள்வி 2
உயில் எழுதாமல் சொத்தின் உரிமையாளர் அவர் பெயரிலே சொத்து வைத்து இருக்கிறார் என்றால் வாரிசு அடிப்படையில் சொத்துக்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு நேரடியாக வந்து சேரும். பிள்ளைகள் இல்லை என்றால் இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு போகும்.
கேள்வி 3
உயில் எழுதாமல் இருந்தால் நேரடியாக வாரிசுகளுக்கு சொத்துக்கள் சேரும். அவ்வாறு சேரும் சொத்துக்களுக்கு தான் பிரச்சனை கண்டிப்பாக வரும். ஏனென்றால் எனக்கு இவ்வளவு உனக்கு இவ்வளவு என்று பிரச்சனை வரும். அப்படி இருந்தால் சம பாகமாக பெரியோர்கள் முன்னிலையில் பிரித்து கொள்ளலாம். ஒருவேளை பிரிக்கும் சொத்தில் உடன்பாடு இல்லை என்றால் வழக்கு தொடரலாம்.
கேள்வி 4
பாகப்பிரிவினை செய்யும்போது ஒருவர் சம்மதிக்கிறார் மற்றொருவர் சம்மதிக்கவில்லை என்றால் அதற்கு தகுந்த பணமோ அல்லது பொருளோ கொடுக்கலாம். அப்படி சம்மதிக்காத நபர் அந்த பொருளை வாங்குகிறார் என்றால் விடுதலை பத்திரம் ஒன்றை எழுதி அவரிடம் கையெழுத்து வாங்கி கொள்ளுங்கள்.
கேள்வி 5
அண்ணன் தம்பி இருவரும் சொத்துக்களை பிரித்து கொண்டனர். ஆனால் ஒரே சர்வே நம்பரில் நிலம் உள்ளது என்றால் அதற்கு தனி பட்டா வாங்கிய பின்னர் சர்வேயரை கொண்டு உட்பிரிவு செய்து கொள்ள வேண்டும்.