அனுபவ பாத்தியம் என்றால் என்ன ( பாத்தியதை ), அனுபவ பட்டா பெறுவது எப்படி ( anubava pathiyam enral enna ) - அனுபவ பாத்தியம் சட்டம் என்பது ஒருவர் மற்றொருவருடைய நிலம், வீடு வாடகை அல்லது குத்தகை எடுத்திருந்து அதனை அனுபவித்து வந்தால் அது அனுபவ பாத்தியம் எனப்படும்.
உதாரணமாக ஒரு நபர் வீடு வாடகை எடுத்திருந்தது சுமார் 12 ஆண்டுகள் மேலாக வசித்து அனுபவித்து வந்தால் அவர் அனுபவ பாத்தியம் சான்று வாங்க தகுதி ஆனவர் ஆவார். வீட்டின் உரிமையாளர் முதலில் வீடு வாடகை வருபவரிடம் குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தத்தை போட வேண்டும். அதில் அனைத்து விதமான தகவல்களை அதில் கூறி வீடு வாடகை குடியிருப்பவர் மற்றும் வீடு வாடகை விடுபவர் இரண்டு பேரும் கையொப்பம் இட வேண்டும்.
ஒருவேளை ஒப்பந்தம் போடாமல் வெறும் வாய்மொழியாய் சொல்லி இருந்தால் கண்டிப்பாக அது பிரச்சனையே வந்து சேரும். ஏனென்றால் குடியிருப்பவர் அனுபவ பாத்தியம் அப்ளை செய்து இருந்தால் கண்டிப்பாக அவருக்கு வந்து சேரும். அதாவது இதனை எதிரிடை அனுபவ பாத்தியம் என்று பொருள்.
பொதுவாக தனி நபர் உங்களுக்கு வாடகை அல்லது குத்தகையில் வீடு மற்றும் நிலங்களை அனுபவிக்க விட்டால் நீங்கள் அதில் 12 ஆண்டுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதே அரசாங்கம் நிலங்களாக இருந்தால் 30 ஆண்டுகள் நீங்கள் அதில் வசிக்க வேண்டும். அனுபவ பாத்தியம் கொண்டு ஒருவர் எந்த நிபந்தனையிலும் கையெழுத்து இடாமல் இருந்தால் கண்டிப்பாக அவருக்கு சொத்து கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அதனால் நீங்கள் குத்தகை விடுமுன் அனைத்து விதமான நிபந்தனைகள் சொல்லி கையெழுத்து வாங்கி விடுங்கள்.