அரசு மானியம் மாடித்தோட்டம் கிட் 2024 ( maadi thottam government kit apply online in tamil ) - இதனை மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டம் என்றும் சொல்லலாம். அரசினால் வீட்டில் தோட்டங்கள் பராமரிப்பதற்கும் அல்லது புதிதாய் வைப்பதற்கும் வழி வகுக்கிறது. இதில் பயனாளிகள் பயன் அடையவேண்டுமென்று தமிழக அரசாங்கம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக கிட் ஒன்றை மானியமாக வழங்குகிறது. இதனை நாம் வீட்டிற்கு கூட பயன்படுத்த முடியும். இதில் அரசாங்கம் நமக்கு கொடுக்கின்ற விதைகள் தரமானதாகவும் ஊட்டம் தரும் காய்கறிகளாகவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் தரக்கூடிய ஊட்டச்சத்து தளைகளாகவும் தருகின்றது. இந்த மாடி தோட்டம் அமைக்க அரசு மானியங்களாக இல்லாமல் தனியாக நாம் வாங்கினால் கிட்டத்தட்ட 4000 ரூபாய்க்கு மேலே இருக்கும். இதனால் நமக்கு கிட்டத்தட்ட 3800 ரூபாய் வரையும் சேமிக்கலாம்.
தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மாடி தோட்டம்
அரசாங்கம் ஒரு ஆதார் கார்டிற்கு 2 கிட் தருகிறது. அந்த ஒரு கிட்டில் ஆறு பேக் இருக்கும். ஒரு வீட்டில் மொத்தமாக இரண்டு ஆதார் கார்டுகளை பயன்படுத்தி 4 கிட்கள் வாங்கலாம். அதாவது 24 பேக் நம்மிடம் வந்துவிடும். உங்களுக்கு மாடி தோட்டம் அமைப்பதற்கு தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். அரசாங்கம் கொடுக்கும் கிட்களில் ஒரு புக்லெட் கொடுத்திருப்பார்கள். அதிலேயே முதலில் எப்படி ஆரம்பிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் என்பதனை தெளிவாக அதில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இதில் மக்கள் இரண்டு விதமாக தோட்டங்களை வைக்க அரசு உதவி புரிகிறது. ஒன்று மாடித்தோட்டம் இரண்டு காய்கறி தோட்டம் ஆகும். ரூபாய் 900 உள்ள பொருட்களை நமக்கு அரசாங்கம் மானியம் போக ரூபாய் 225 க்கு கொடுக்கிறது. இதனால் மக்களுக்கு 675 வீதம் லாபமாக அமைகிறது. இதில் அரசு தரப்பில் என்னென்ன காய்கறிகளும் மற்றும் விதைகளும் தருகிறார்கள் என்பதை கீழே ஒவ்வொன்றாக பாருங்கள்.
1. செடி வளர்ப்பு பைகள்
2. தென்னை நார்
3. காய்கறி விதை
4. அசோஸ்பைரில்லம்
5. பாஸ்போபாக்டீரியா
6. ட்ரைகோடெர்மா விரிடி
7. வேப்பெண்ணை
இதில் கொடுக்கப்பட்ட காய்கறி திட்டங்கள் நாம் பெறலாம். மேலும் இதில் இல்லாத கத்திரி, வெண்டை, புடலங்காய், கொத்தவரை, பாகற்காய், தக்காளிகள் மற்றும் கீரைகளின் விதைகளும் பெற முடியும்.
மாடி தோட்டம் பை எங்கு கிடைக்கும், மாடி தோட்டம் அரசு கிட் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
இதில் ஆவணங்களை நீங்கள் கொடுப்பது ஆதார் கார்டு மற்றும் புகைப்படம் மட்டுமே. ஆனால் நேரில் சென்றால் இந்த மானியம் வராத காரணத்தினால் ஆன்லைனில் விண்ணப்பித்து approval வாங்கி பிறகு தான் உங்கள் ஊரில் உள்ள தோட்டக்கலை துறையில் சென்று அந்த படிவத்தினை காண்பித்தால் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்களுக்கு 225 ரூபாயில் கிடைக்கும்.
இந்த காய்கறிகள் விதைகள் எப்போதுமே சுழற்றி முறையில் தான் இருக்க வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒரு முறையாவது பயிர் சுழற்றி செய்தல் மிகவும் அவசியம் ஆகும்.