பீரோ வைக்கும் திசை 2024

பீரோ வைக்கும் திசை 2024 - பீரோ என்பது நாம் தினமும் உபயோகிக்கும் முக்கியமான பொருட்களுக்குள் ஒன்றாகும். நம்முடைய பணம், நகை, பத்திரங்கள், சான்றிதழ்கள் போன்றவைகளை பத்திரமாக வைக்க கூடிய ஒரு இடம் என்றால் அது பீரோ தான். மற்ற இடங்களை காட்டிலும் பீரோவில் மேற்கண்ட பொருட்களை வைப்பதற்கு மிகவும் ஏதுவான இடங்கள் என்பதில் சந்தேகமில்லை.

பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும்

ஆனால் அந்த பீரோவை எந்த திசையில் எந்த இடத்தில் எந்த பக்கம் பார்த்த மாதிரி இருக்க வேண்டும் என்று நம்மில் சில பேருக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு தான் இந்த முக்கியமான பதிவு.

பீரோ வைக்கும் திசை


தெற்கு பார்த்த வீட்டில் பீரோ வைக்கும் திசை

தென்மேற்கு மற்றும் தெற்கு பகுதியை நிருதி மூலை என்போம். அடிப்படையில் மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளை வாயு மூலை என்றும் வடகிழக்கு மற்றும் வடக்கை ஈசான்ய மூலை என்றும் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளை அக்னி மூலை என்றும் சொல்வார்கள். புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நிருதி மூலையை தேர்ந்தெடுத்து அதில் 1 எண் போன்று கிழக்கு பக்கம் நோக்கியும் அல்லது எண் 2 போன்று வடக்கு நோக்கியும் உங்கள் பீரோக்களை வைக்கலாம்.

வாஸ்து அளவுகள்

வடக்கு பார்த்து பீரோ வைக்கலாமா அல்லது வடமேற்கு மூலையில் பீரோ வைக்கலாமா

நிருதி மூலையில் ஒருவேளை உங்கள் பீரோக்களை வைக்க முடியாமல் போனால் வாயு மூலையை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதில் கிழக்கு நோக்கி தான் வைக்க வேண்டும்.

பூஜை அறையில் பீரோ வைக்கலாமா

கண்டிப்பாக வைக்க கூடாது. முடிந்த வரையில் நிருதி மூலையில் பீரோவை வைக்க பாருங்கள். ஏனெனில் எதிர் மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் செயல்கள் அதிகமாக வர வாய்ப்பிருக்கிற காரணத்தினால் நிருதி மூலையில் வைப்பார்கள்.

ராசி நட்சத்திரம் அட்டவணை