பட்டா சிட்டா பாக்கணும் தற்போது திறந்துள்ளது தற்போது திறந்துள்ளது ( i want see patta chitta ) - பட்டா என்பது ஒரு நிலத்தின், மனையின் உரிமையாளர் யார் என்பதனையும் அவருக்கு எத்தனை நிலங்கள் கூட்டாக அல்லது தனியாக உள்ள நிலங்கள் மற்றும் நிலத்தின் வகைப்பாடு, தீர்வை காட்டுவதே சிட்டா ஆகும். இவை இரண்டுமே ஆன்லைனில் Eservices என்கிற இணையத்தளத்தில் இலவசமாக தற்போது கிடைக்கிறது.
இதனை பார்க்க Eservices.tn.gov.in வெப்சைட் சென்று உங்கள் மாவட்டம், வட்டம், வருவாய் கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் உள்ளீடு செய்தால் போதுமானது.
இதையும் படிக்க: பட்டா / சிட்டா விவரங்கள் சரிபார்க்க - குறிப்பு எண்
நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் தங்கள் பட்டாவை அல்லது சிட்டாவை காண Clip tn gov in என்கிற இணையத்தளத்தினை பயன்படுத்த வேண்டும். மேலும் மேற்குறிப்பிட்ட இணையத்தளத்தினை பயன்படுத்தி கிராம புறங்களில் உள்ள மக்களும் உங்கள் ஆவணங்களை பார்த்து கொள்ளலாம்.
குறிப்பு
சர்வே எண் தெரியவில்லை என்றால் பட்டா எண் போதுமானது. பட்டா எண்ணும் தெரியவில்லை என்றால் பெயர் தெரிந்தால் போதுமானது. மேலும் ஒரு சிலர் கிராமத்தை தவறாக சூஸ் செய்து கொள்கின்றனர். உதாரணமாக நீங்கள் வசிக்கும் கிராமம் எந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு உட்பட்டது என தெரிய வேண்டும். இதனை பெரும்பாலும் மக்கள் மணக்காயர் என்றழைப்பர். மணக்காயர் உங்கள் கிராமத்திற்கு எந்த வருவாய் கிராமம் என்று சரியாக தெரிந்து கொண்ட பின்னர் மேற்கண்ட இணையதளத்தை பயன்படுத்தலாம். இதில் நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் ஒரு சிலர் eservices வெப்சைட் யை பயன்படுத்தி தங்களது சிட்டாவை காண முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது ஒரு சில நேரத்தில் வருவதில்லை. ஆதலால் மேற்குறிப்பிட்ட வெப்சைட் clip tn gov in வெப்சைட்டினை பயன்படுத்தி உங்களுக்கான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விளக்கம்
ஒரு நிலத்தின் உரிமையாளர் யார் என்பதனை மிகவும் துல்லியமாக காட்டக்கூடிய ஆவணம் தான் இந்த பட்டா ஆகும். பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமையாளர்கள், விலாசம், தீர்வை மற்றும் இதர விஷயங்களை அப்டேட் செய்திருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் அதாவது கூட்டுப்பட்டாவில் இருக்கின்ற பெயர்களையும் வருவாய்த்துறை அப்டேட் செய்திருக்கும்.
இதையும் காண்க: TamilNilam
சிட்டா என்பது பட்டாக்களின் தொகுப்பு தான். அதனால் பட்டாவின் நகலை மட்டும் எடுத்தால் நமக்கு போதுமானது. ஒருவேளை தேவைப்பட்டால் இணையதளத்தில் பட்டா எடுக்கின்ற மாதிரியே எடுத்துக்கொள்ளலாம். ஒரு பட்டா எண்ணில் ஏகப்பட்ட சர்வே எண்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக 234 என உள்ள பட்டா எண்ணிற்கு 10 சென்ட் நிலத்தின் அளவு உள்ளது. இதனை சரிபாகமாக பிரிக்க நேர்ந்தால் ஒருவருக்கு தலா 05 சென்ட் கிடைக்கும். அப்போது 234/1 மற்றும் 234/A என்கிற சர்வே எண் மற்றும் உட்பிரிவுகள் கிடைக்கும். மேலும் ஒரு பட்டா எண்ணிற்கு இரண்டு சர்வே எண்கள் மாறும். இதேபோல மற்ற நிலங்களை ஒருவர் வாங்கினால் அவர் எத்தனை நிலம் வாங்கியுள்ளார் என்பதனை காட்டக்கூடியது தான் இந்த சிட்டா ஆகும்.
இதையும் படிக்க: Patta chitta ec
பட்டா பார்க்க:
தற்போது நவீன தொழில்நுட்பம் வந்துவிட்டதால் மிகவும் எளிதாக ஒரு நிமிடத்திற்குள்ளாகவே எடுத்து கொள்ளலாம். இதற்கு சர்வே எண் தெரிந்தாலே போதுமானது. பட்டாவின் ஒரிஜினல் புகைப்படம் அதாவது லேண்ட் டீடெயில்ஸ் பார்ப்பதற்க்கு சர்வே எண், பெயர் இவைகளில் ஏதேனும் ஒரு தெரிந்திருந்தாலே போதும். ஆனால் லேண்ட் புலப்படம் எனப்படும் வரைபடத்தை எடுக்க நிச்சயம் சர்வே எண் மற்றும் அதன் உட்பிரிவு எண் கட்டாயம் தெரிந்து வைப்பது அவசியமே.
குறிப்பு
பட்டா எண்ணை என்டர் செய்து உள்ளிட்டால் அந்த பட்டா எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அல்லது பிரிக்கப்பட்டுள்ள அனைத்து நிலங்களையும் ஒன்றாகவே காட்டிவிடும். அதனால் பட்டா எண் மற்றும் சர்வே எண் என்டர் செய்து உள்ளிட்டால் தனித்தனி நிலங்களை காட்டும்.
பட்டா அல்லது சிட்டா எழுத்து பிழைகள் அதாவது 0.12 இருக்க வேண்டிய இடத்தில் 0.01 என்று இருந்தாலும் அல்லது பெயரில் பிழைகள் இருந்தாலும் உடனடியாக கிராம நிர்வாக ஆபிஸ் சென்று மாற்றி கொள்ளலாம். இதற்கு சில வாரங்கள் கூட ஆகலாம். பிழைகள் சரியான பின்னரே ஆன்லைனில் மாற்றம் ஆகும். அதனையும் ஒரு ஆவணமாக பயன்படுத்தலாம். முழுமையான அதாவது திருத்தம் செய்யப்பட்ட ஆவணத்தையே பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். ஏனெனில் பிற்காலத்தில் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதாக இருக்க வேண்டும்.
சமீபகாலமாக பட்டா மாற்றம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நிலம் இணையத்தளம் அல்லது பத்திர பதிவு செய்யும்போதே ஆட்டோமேட்டிக் மாற்ற விண்ணப்பம் அங்கேயே இருக்கும். இவ்விரண்டும் செய்ய முடியாதவர்கள் நேரடியாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பம் செய்யுங்கள்.
மேலும் பல தகவல்களுக்கு பட்டா சிட்டா கோ இன் இல் கமெண்ட் செய்யுங்கள். பல தகவல்கள் தினசரியும் அப்டேட் செய்யப்படுகின்றது. ஆதலால் தினம் தினம் புது புது பட்டா பத்திரம் செய்திகள், அரசாணைகள் ஆகியவைகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Links