சீலிங் நிலம் என்றால் என்ன ( land ceiling act in tamil nadu ) - நில உச்சவரம்பு சட்டம் மூலம் அரசாங்கம் எடுத்துக்கொள்கின்ற நிலம் தான் சீலிங் நிலமாகும். நிலமானது அனைவருக்கும் இருக்க வேண்டுமென்றும் அதே சமயத்தில் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்ள இடங்கள் அல்லது நிலம் தான் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு 1978 இல் இந்த சட்டம் கொண்டு வந்தது.
2800 ஹெக்டர் வரையிலான நிலங்கள் அரசாங்கத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் 500 முதல் 1000 ஹெக்டர் நிலங்கள் மட்டுமே முறையாக சீலிங் செய்யப்பட்டு நிலம் இல்லாதவர்களுக்கும் மற்றும் பொது நோக்கத்திற்காக அரசாங்கம் எடுத்து கொண்டார்கள். இதர நிலங்கள் சீலிங் செய்யப்பட்டாலும் அது ஒருவர் கை ஒருவர் மாறி கிரையம் செய்து வருகின்றனர். இப்போதும் அந்த நிலங்கள் சீலிங் நிலம் என வகைப்படுத்தப்பட்டவையாகும்.
இதையும் பார்க்க: நீர்நிலை புறம்போக்கு
சீலிங் நிலத்தை வாங்கலாம். ஆனால் வழக்கில் இல்லாத சீலிங் நிலங்களை வாங்கி கொள்ளலாம். இதற்காக அரசாங்கம் 1998 பிறகு அதற்கான தொகையை சீலிங் அலுவலகரிடம் செலுத்தி மனை வரன்முறை படுத்தப்பட்ட நிலங்களாக மாற்றி கொள்ளலாம் என்று கூறியது.
இதையும் பார்க்க: பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி
ஏற்கனவே இந்த மாதிரி நிலங்களை வாங்கி இருந்தால் ஒவ்வொரு நகர்ப்புறங்களில் சீலிங் லேண்ட் அலுவலகம் இருக்கும். அங்கு சென்று innocent buyers படிவத்தை பூர்த்தி செய்து தாய் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களை கொடுக்கலாம்.
குறிப்பு
சீலிங் செய்யப்பட்ட நிலங்களுக்கு வருவாய்துறையினரால் கொடுக்கப்படும் பட்டா ஆவணம் கொடுக்கமாட்டார்கள். ஆட்பனையற்ற நிலங்கள் என உறுதியான பின் அதற்கு பட்டா வழங்குவார்கள்.
இதையும் பார்க்க: வீட்டு பட்டா பார்ப்பது எப்படி