சித்திரை மாதம் வீடு குடி போகலாமா, கட்டலாமா மற்றும் கிரகப்பிரவேசம் செய்யலாமா, மொட்டை போடலாமா - தமிழ் மாதத்தில் முதல் மாதமாக சித்திரை உள்ளது. இந்த மாதத்தை பொறுத்தவரை அனைத்து சுப விசேஷங்களும் தாராளமாக செய்யலாம். ஏனெனில் மிகவும் சிறந்த மாதங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் ஏற்கனவே இருந்த வாடகை வீட்டில் இருந்து இன்னொரு வாடகை வீட்டிற்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் குடி போகலாம். ஆனால் பழைய வீட்டில் வெளியே வந்தாலும் அல்லது புதிய வீட்டினுள் சென்றாலும் ராகு மற்றும் எமகண்ட காலங்களில் செல்லவும் அல்லது நுழையவும் கூடாது.
வீடு குடி போக, கட்டுவது மற்றும் கிரக பிரவேசம் செய்ய ஏற்ற தினங்கள்
ரோகினி, சதயம், திருவோணம், உத்திரட்டாதி, பூசம் மற்றும் ரேவதி நட்சத்திரங்கள் வருகின்ற தேதிகளில் செல்லலாம். நல்ல நாட்கள் எடுத்துக்கொண்டால் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் செல்ல வேண்டும். ஆனால் இந்த நாட்கள் வளர்பிறையாக இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். திதிகளில் பஞ்சமி, திருதியை, சப்தமி மற்றும் தசமி தினங்களிலும் நாம் செய்யலாம்.
சித்திரை மாதத்தில் வாடகை வீடு குடி போகலாமா
கண்டிப்பாக போகலாம். ஆனால் சந்திராஷ்டமம், கரி நாட்கள் வந்தால் தவிர்த்தல் நல்லது.
சித்திரை மாதம் மொட்டை போடலாமா
தமிழ் புத்தாண்டு முதல் தேதியை விட்டு மற்ற நாட்களில் மொட்டை அடித்து கொள்ளலாம்.
Read More: மைத்ர முகூர்த்தம் 2023