சித்ரா பௌர்ணமி 2025 நேரம் திருவண்ணாமலை கிரிவலம் வாழ்த்துக்கள் ( chitra pournami 2025 in tamil timings ) - நாம் கடவுளை வழிபட எல்லா நாட்களையும் உபயோகப்படுத்தி கொள்ளலாம். ஆனால் தெய்வங்களின் சக்தி என்றைக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த நாளில் நாம் வழிபட்டால் நமக்கு மிகுந்த நன்மை ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்படி இந்த சித்திரை பௌர்ணமி என்ன சிறப்பு இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
சித்ரா பௌர்ணமி என்றால் என்ன
சித்திரை மாதம் நாம் தமிழ் புத்தாண்டு ஆக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி மற்றும் சித்திரை நட்சத்திரம் சேர்ந்து வருவதன் மூலம் அது சித்ரா பௌர்ணமி ஆகிறது. வழக்கமாக ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மலை மீது உள்ள அருள்மிகு சிவபெருமானை நாம் வழிபடுகின்றோம். அப்படி இந்த மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தில் நாம் சிவபெருமானை வணங்கினால் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
சற்று முன்னர்: காளஹஸ்தி செல்லும் வழி
வழிபாடு
சூரிய பகவானும் சந்திர பகவானும் அன்றைய தினத்தில் மிகவும் உக்கிரமாக இருப்பதால் நாம் அம்பிகையை வணங்கலாம். அந்த தினத்தில் திருமண தடைகள் இருப்பவர்கள், பேறு கிடைக்க வேண்டிக்கொள்கிறவர்கள் வணங்கி கொள்ளலாம். அதே சமயத்தில் இந்த தினத்தில் நாம் சித்திர குப்தரை வணங்க வேண்டும். நமது பாவங்களை கடுகளவு ஆக்கவும் நமது எண்ணங்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தோடு நாம் அவரை வணங்குதல் நல்லது.
சித்ரா பௌர்ணமி 2025 தேதி தேதி மற்றும் நேரம்
ஏப்ரல் 22 ஆம் நாள் மாலை 05.55 முதல் 23 நாள் மாலை 07.48 வரையும் பவுர்ணமி திதி இருக்கிறது.
சற்று முன்னர்: சந்திராஷ்டமம் அன்று செய்ய கூடாதவை