கிளைம் எப்படி செய்வது - கிளைம் என்றால் நீங்கள் ஒரு நிறுவனத்தின் கீழ் வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் pf பணம் தேவைப்படும்போது எடுப்பது கிளைம் ஆகும். கிளைம் செய்தால் தான் அந்த பி எப் பணம் உங்களை சேரும். இதன் process ஒரு மாதங்கள் கூட ஆகலாம். அதனால் மக்கள் சற்று பொறுமையாக இருந்து தான் பணம் எடுக்க வேண்டும்.
கிளைம் செய்வதற்கு முன்னர் உங்கள் வங்கி கணக்கு, ஆதார் கார்டை கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். ஒரு சில நேரத்தில் கணக்கு புத்தகம் தொலைந்த நேரத்தில் உங்களுக்கான செக் புக் இணைக்கலாம். நாம் வீட்டில் இருந்தபடியே இந்த Pf பணத்தினை எடுக்கலாம். இதற்காக ஒரு அரை மணி நேரம் ஒதுக்கினாலே போதுமானது.
உங்கள் UA நம்பர் தொலைந்துவிட்டது அல்லது மறந்துவிட்டது என்றால் உங்கள் தொலைபேசி எண்ணை வைத்து கொண்டு UAN எண்ணை எடுக்கலாம். இதற்காக நீங்க Official வெப்சைட் சென்று know your UAN என்று கொடுத்தால் உங்கள் தொலைபேசி எண்ணை கேட்கும். அப்போது மொபைல் நம்பர் கொடுத்தால் உங்கள் UAN எண்கள் கிடைக்கும்.
நிறுவனத்தின் ஊழியர்கள் லாகின் செய்து விவரங்கள் அனைத்தும் சரிபார்த்துவிட்டு கிளைம் செய்தால் உங்கள் Pf Money உடனடியாக கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் EpfIndia இணைய தளம் சென்றால் உங்கள் ஸ்டேட்டஸ் தெரிந்து விடும்.