Crstn.org பிறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம் - பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டாலோ அல்லது இருக்கின்ற நகலோ அசலோ சரியில்லை என கருதினால் ஆன்லைனில் நாம் எளிதாக எடுத்து கொள்ள முடியும். இதற்காக தமிழ்நாடு அரசு Crstn.org வெப்சைட் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை அறிமுகப்படுத்தி பல ஆண்டுகள் இருப்பினும் ஒரு சிலருக்கு இன்று வரையும் தெரியாமல் இருக்கும்.
இப்போது இருக்கின்ற 38 மாவட்டங்களில் சென்னையை தவிர்த்து இந்த இணையத்தளத்தில் பிறப்பு சான்றிதல்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். சென்னைக்கு என்று தனியாக ஒரு வெப்சைட் உள்ளது. அதன் பெயர் Chennaicorporation.gov.in ஆகும்.
வழிமுறைகள்
1. முதலில் மேற்கண்ட வெப்சைட் செல்லவும்.
2. அப்படி சென்றவுடன் இடது பக்கத்தில் RCHID எண்ணும் வலது பக்கத்தில் விவரங்கள் மூலமும் அப்டேட் செய்துகொள்ளலாம்.
3. இரண்டு வழிமுறைகளில் RCHID என்பதை தேர்வு செய்தால் சரியாக இருக்கும். ஆனால் அந்த எண் கொண்ட அட்டை தொலைந்து இருந்தால் இரண்டாம் முறையினை உபயோகித்து கொள்ளுங்கள்.
4. மேற்கண்ட மூன்று படிகளையும் முடித்த பின்னர் View என்பதை தேர்வு செய்தால் நீங்கள் பதிவு செய்திருந்த பிறப்பு சான்றிதழ் எடுத்துக்கொள்ளலாம்.
இதையும் காண்க: பிறப்பு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்