தான செட்டில்மென்ட் கட்டணம் 2024

தான செட்டில்மென்ட் கட்டணம் 2024 - செட்டில்மென்ட் என்பது குடும்ப உறுப்பினர்களுக்குண்டான ஒரு விதமான பரிவர்த்தனை ஆகும். ஏன் மற்ற குடும்ப அல்லாத உறுப்பினர்களுக்கு பரிவர்த்தனை செய்ய முடியாதா என்று கேட்டால் கொடுக்கலாம்  என்பதே ஆகும். ஆனால் பதிவு மற்றும் ஸ்டாம்ப் டூட்டி அதிகமாகும்.

தான செட்டில்மென்ட் கட்டணம் 2024


குடும்ப அல்லாத நபர்கள்

குடும்ப அல்லாத நபர்களுக்கு பரிவர்த்தனை செய்யும் சூழல் ஏற்பட்டால் அவர்கள் அதற்க்கு கிரயமே கொடுத்து விடலாம். ஏனெனில் இரண்டும் ஒரே கட்டணம் தான். முத்திரை 7 சதவீதமும் பதிவு கட்டணம் 2 சதவீதமும் வசூல் செய்யப்படும். பெரும்பாலும் தான செட்டில்மெண்ட் என்று எடுத்து கொண்டால் அது நிச்சயமாக குடும்ப நபர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

50 ரூபாய் பத்திரம் மதிப்பு

குடும்ப நபர்கள்

குடும்ப நபர்களுக்கு முத்திரையும் பதிவு கட்டணமும் தலா 1 சதவீதமும் மட்டுமே. எவ்வளவு சொத்து இருந்தாலும் ரூபாய் 50, 000 மட்டுமே வசூல் செய்யப்படும்.

பத்திர பதிவு செய்ய ஆகும் செலவு