Dhana settlement rules in tamil - தான செட்டில்மென்ட் என்பது ஒரு குடும்பத்தில் நடக்கும் பத்திர பரிமாற்றம் அல்லது பரிவர்த்தனை ஆகும். அசையா அல்லது அசையும் சொத்தை ஒரு குடும்ப நபர்களுக்கு இலவசமாக பரிவர்த்தனை செய்வது தான செட்டில்மெண்ட் ஆகும். ஆனால் பதிவுக்கட்டணங்கள் உண்டு. தானப்பத்திரம் வேறு தான செட்டில் வேறு என்பதை பயனாளர்கள் புரிந்து கொள்தல் மிகவும் அவசியமாகும்.
எடுத்துக்காட்டு 1
ஒருவர் தன் மகனுக்கு பத்திர பதிவு செய்கிறார். அந்த பத்திரத்தில் நிபந்தனையோடு பத்திரம் எழுதுகிறார். அதில் இந்த பத்திரம் பின்னாட்களில் ரத்து செய்யவோ அல்லது திரும்ப பெறவோ மாட்டாது. மற்ற வாரிசுகள் இதில் பங்கு கேட்கமாட்டார்கள் என பத்திரத்தில் எழுதி கொடுப்பவர் சுயமாக எழுதி அதனை பதிவு செய்கிறார். பின்னர் வாரிசுகள் புதிய தான செட்டில்மென்ட் பத்திரத்தை ஒவ்வொருவருக்குமே மறுபடியும் இன்னொரு செட்டில்மென்டை அவரே எழுதுகிறார். இதில் எது செல்லும்?
முதலில் எழுதப்பட்ட செட்டில் பத்திரமே செல்லும். ஏனெனில் நிபந்தனையோடு அந்த பத்திரத்தில் எழுதி வாங்கி விட்டார். மேலும் அதனை தவறுதலாக பயன்படுத்தாமல் சுவாதீனத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றார் என்றால் நிச்சயம் அந்த பத்திரத்தை எழுதிய நபராலும் அதனை ரத்து செய்ய முடியாது என 2021 ஒரு வழக்கில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இருதரப்பும் சேர்ந்து அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம்.
இதையும் பார்க்க: நில அனுபவ சான்றிதழ் மாதிரி
எடுத்துக்காட்டு 2
நிபந்தனையும் எழுதவில்லை ஆனால் அதனை தவறுதலாக பயன்படுத்துகிறார் என்றால் அதனை ரத்து செய்ய முடியுமா?
நிச்சயம் முடியும். நிபந்தனையோடு தான் ஒரு செட்டில் பத்திரம் எழுதப்பட வேண்டும் ( கட்டாயமில்லை ). ஆனால் தவறுதலாக சொத்துக்களை பயன்படுத்தினாலோ அல்லது சுவாதீனத்தை அனுபவிக்காமல் இருந்தால் அந்த பத்திரத்தை எளிதாக ரத்து செய்ய முடியும்.
இதையும் பார்க்க: பாகப்பிரிவினை பத்திரம் மாதிரி Pdf