Dtcp approval வாங்குவது எப்படி கட்டணம், டிடிசிபி அப்ரூவல் என்றால் என்ன - இன்றைய கால கட்டத்தில் பலரும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களில் டிடிசிபி ஒன்றாகும். ஏனெனில் முறையான அரசாங்க அனுமதியோடு அனைத்து வசதிகளும் பெற வேண்டுமென்றால் இந்த அப்ரூவல் வாங்குவது கட்டாயமாகும்.
இந்த டி டி சி பி களில் துணை அலுவலகம் உள்ளது. அது தான் எல் பி ஏ ஆகும். அதாவது உள்ளூர் திட்ட குழுமம் என்று பொருள். இதுவும் டி டி சி பி யின் ஒரு துறை தான். இது நகர்ப்புறங்களில் 05 ஏக்கருக்கு கீழ் அங்கீகாரம் பெற விரும்புவோர் மற்றும் கிராமப்புறங்களில் 10 ஏக்கருக்கு கீழ் அங்கீகாரம் பெற விரும்புவோர் இந்த அலுவலகத்திற்கு சென்று தான் விண்ணப்பிக்க முடியும்.
இதையும் பார்க்க: பஞ்சாயத்து மனைக்கு அங்கீகாரம் பெற என்ன வழி
சரியான லேஅவுட் அடிப்படையில் தான் இந்த அங்கீகாரம் கிடைக்கும். இந்த அங்கீகாரத்தின் நோக்கமே 24 அடி சாலை பக்கத்தில் உள்ளதா, நீர்நிலைகள் உள்ளதா, குப்பை கிடங்கு உள்ளதா மற்றும் இதர விஷயங்கள் சரியாக இருக்கின்றதா என ஆராய்ந்த பிறகு தான் அங்கீகாரம் கொடுக்கப்படும்.
இதையும் பார்க்க: தமிழ் இல் dtcp ஒப்புதல் சமீபத்திய செய்தி