EB உடன் இணைக்கப்பட்டுள்ள ஆதாரை எவ்வாறு சரிபார்க்கலாம்?

EB உடன் இணைக்கப்பட்டுள்ள ஆதாரை எவ்வாறு சரிபார்க்கலாம்? - மிகவும் எளிமையான வழிகளில் ஒரு நிமிடத்தில் நாம் நம்முடைய ஆதார் அட்டை மின் இணைப்புடன் இணைந்துவிட்டதா என்று சரிபார்த்து கொள்ளலாம். நமது பட்டா சிட்டா கோ இன் இணையத்தளத்தில் ஏற்கனவே அப்டேட் செய்தது போல் ஆதார் கார்டு தற்போது அனைத்து இடங்களிலும் மற்றும் அனைத்து வகையான அரசாங்க அட்டையுடன் இணைக்க அறிவுறுத்திருக்கிறார்கள்.

EB உடன் இணைக்கப்பட்டுள்ள ஆதாரை எவ்வாறு சரிபார்க்கலாம்?


மின் அட்டையுடன் ஆதாரை இணைத்தால் இலவச வீட்டு மின் இணைப்பு பெறுவோர், கைத்தறி, விசைத்தறி மற்றும் இரண்டு அல்லது மூன்று வீட்டு மின் இணைப்பு எவ்வளவு பேர் வைத்து இருக்கின்றனர் என்று அறிந்து கொள்ள முடியும். மற்ற வணிகம், தொழிற்சாலை மற்றும் இதர மின் இணைப்புகளுக்கு இது கட்டாயமில்லை.

இதையும் பார்க்க: ஆதார் கார்டு எடுக்க தேவையான ஆவணங்கள்

வழிமுறைகள்

1. முதலில் aadhar tnebltd வெப்சைட் செல்லவும்.

2. இரண்டாவதாக உங்கள் சர்வீஸ் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.

3. சரியானதாக இருந்தால் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பது காட்டி விடும்.

4. அப்படி காட்டவில்லை எனில் உங்கள் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் உள்ளிட்டு பதிவு செய்தால் போதுமானது.

இதையும் பார்க்க: புதிய மின் இணைப்பு பெற கட்டணம் எவ்வளவு 2023