எந்த ரேஷன் கார்டுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்

எந்த ரேஷன் கார்டுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும் - ஐந்து விதமான குடும்ப அட்டை வகைகள் இருப்பது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். தமிழ்நாடு அரசாங்கமானது ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் 7, 000 கோடி ரூபாய் இதற்கு தனியாக செலவு செய்ய நேரிடும். இதில் யாரு யாருக்கெல்லாம் உரிமைத்தொகை கிடைக்கும் என பல குழப்பங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் மூலம் 10.07.2023 அன்று அரசாணை நிலை எண் 15 பயன்படுத்தி இந்த திட்டத்தின் நோக்கங்கள்  விஷயங்களை மக்கள் அறிய வேண்டுமென்பதற்காக இதனை வெளியிட்டிருந்தனர்.

எந்த ரேஷன் கார்டுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்


அரசாணையில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

1. ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே அப்ளை செய்ய முடியும்.

2. வீட்டு மின் இணைப்பு பெற்றவர்கள் வருடத்திற்கு 3600 யூனிட் மின்சாரம் உள்ளாக உபயோகித்து இருக்க வேண்டும்.

3. நஞ்சை நிலமாக இருந்தால் 5 ஏக்கரும் புஞ்சையாக இருந்தால் 10 ஏக்கருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4. அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பெறுகின்ற ஓய்வூதியம் பெறுவோர் இருந்தால் இதற்கு அப்ளை செய்ய முடியாது.

5. வருமான வரி செலுத்துபவரும் இதற்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.

6. வருமான வரி சான்றிதழ் இணைக்க கட்டாயமில்லை.

7. குடும்ப அட்டை வகைகள் நிறைய இருந்தாலும் மேற்கண்ட விதிமுறைகளின் மூலமாக தான் மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.

8. NPHH - NC கொண்ட அட்டைதாரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு குறைவு.

இதையும் பார்க்க: மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் pdf