எதிரிடை அனுபவ பாத்தியம் சட்டம்

எதிரிடை அனுபவ பாத்தியம் சட்டம் - தனது நிலம் அல்லது இடம் அல்லாத பிற நிலத்தில் வாழ்ந்து அனுபவித்து வந்துவிட்டு பிறகு அந்த இடத்தினை சொந்தம் கொண்டாடி உரிமை கொள்வது எதிரிடை அனுபவ பாத்தியம் எனப்படும். இப்போது வந்து இருக்கும் 28.02.2022 அன்று சட்டம் என்ன சொல்கிறது என்றால் ஒரு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் மேலே அனுபவித்து இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் பிறர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வீர் என்றால் அந்த நிலத்தின் சொந்தக்காரருக்கு தெரிந்தே இருக்க வேண்டும். 

எதிரிடை அனுபவ பாத்தியம் சட்டம்


கேள்வி 1

நான் ஒரு இடத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வருகிறேன். யாரும் அந்த இடத்தின் சொந்தக்காரர் என்று வரவில்லை. அந்த இடம் எனக்கு சொந்தமா ?

கண்டிப்பாக சொந்தம் தான். 12 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வாழ்ந்து வரும் நீங்கள் தான் அந்த இடத்திற்கு சொந்தக்காரர் ஆவர்.

கேள்வி 2

நான் 12 ஆண்டுகள் மேல் வசித்து வருகிறேன். ஆனால் யாரோ ஒருவர் பத்திரம் மற்றும் பட்டா என்னிடம் இருக்கிறது. நான் என்ன செய்ய ? 

நீங்கள் தொடர்ந்து 12 ஆண்டுகள் மேலாக தனியார் நிலத்தில் வாழ்ந்து வந்தால் அனுபவ பாத்தியம் மூலம் அந்த இடம் உங்களுக்கு தான் என்று சட்டம் சொல்கிறது.

கேள்வி 3

எத்தனை ஆண்டுகள் வசித்தால் அந்த இடம் சொந்தமாகும் ? 

கண்டிப்பாக பன்னிரண்டு ஆண்டுகள் அதில் நீங்கள் வாழ்ந்து இருக்க வேண்டும். இடையில் 2 அல்லது மூன்று வருடங்கள் வேறு எங்காவது சென்று பிறகு இங்கே வந்தோம் என்றால் உங்களால் அனுபவ பாத்தியம் வாங்க முடியாது. 

தனியார் நிலம் - 12 ஆண்டுகள் 

அரசு புறம்போக்கு நிலம் - 30 ஆண்டுகள் 

கேள்வி 4 

என்னிடம் நிலம் இருக்கிறது. ஆனால் அந்த நிலத்தை நான் எப்படி பாதுகாப்பது ?

நிலம் வாங்கும்போது அதில் உள்ள பிரச்சனைகளையும் நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும். அவ்வப்போது உங்கள் நிலத்தை கண்காணிக்க வேண்டும். ஒருவேளை உங்களால் வர முடியவில்லை என்றால் உங்களுக்கு நம்பிக்கைக்கு உண்டான நபரையோ அல்லது உங்கள் வீட்டு நபர்களையோ அந்த இடத்தை அவ்வப்போது கண்காணிக்க சொல்லுங்கள். முடிந்தால் 1 மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் நிலத்தை பார்த்து கொள்ளுங்கள்.

கேள்வி 5

நான் குத்தகை விட்டது 2 ஆண்டுகள் தான். ஆனால் குத்தகை எடுத்தவர் 20 ஆண்டுகளுக்கு மேல் அதனை பராமரித்து வருகின்றார். நானும் வேலை பளு காரணமாக அந்த நிலத்தினை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்வது ?

முதலில் நீங்கள் குத்தகை விட்டது எத்தனை ஆண்டுகள் என்று பார்க்க வேண்டும். மேலும் குத்தகை 11 மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாத நிலையில் அந்த நிலம் யார் பராமரிக்கிறார்களோ அவர்களுக்கே அந்த நிலம் சொந்தமாகும்.

தனி அதிகார பத்திரம்

நகல் எடுத்தல் என்றால் என்ன

பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை

Tn.Gov.In