FMB SKETCH DOWNLOAD

FMB Sketch download ஆன்லைன் ( Fmb ஸ்கெட்ச் என்றால் என்ன ) - Fmb என்பது Field Measurement Map ஆகும். ஒவ்வொரு நில பரப்பிற்கும் தனித்தனி வரைபடம் உண்டு. அது பட்டா நிலம் மற்றும் அரசாங்க புறம்போக்கு நிலமாக இருந்தாலும் சரி வரைபடம் அனைவற்றிற்கும் உண்டு. தனிப்பட்ட நில உரிமையாளரின் வரைபடம் எடுக்க அவரின் புல எண் தனியாக Eservices இணையத்தளத்தில் போட்டால் வரும். இதுவே ஒட்டுமொத்த கிராமத்தின் வரைபடம் வேண்டுமென்றால் கிராம அலுவலர் பாதுகாக்கும் அ பதிவேட்டில் தான் இருக்கும்.

இதையும் படிக்க: கிராம நில வகைப்பாடு என்றால் என்ன

கணினிமயமாக்கப்பட்ட பட்டா இணையத்தளத்திலேயே நம்மால் பார்த்து கொள்ள இயலும். நமது நிலம் எப்படி இருக்கின்றதோ அதேபோல் காட்டாது. அது ஒரு வடிவத்தில் தான் காட்டும். அதில் உங்கள் சர்வே எண் , பக்கத்துக்கு நிலத்துக்காரர் சர்வே எண், உட்பிரிவு எண் மற்றும் எல்லைகள் எதுவரை உண்டு என்பதை துல்லியமாக காட்டும்.

இதையும் படியுங்க: Pathiram Nagal Online download

வழிமுறைகள்

1. Eservices என்கிற அரசு இணையதளத்தில் புலப்பட விவரங்களை பார்வையிட  என்பதை தேர்வு செய்யவும்.

2. அப்படி தேர்வு செய்தால் பட்டாவினை நாம் எப்படி எடுக்கின்றோமோ அதேபோல் மாவட்டம், வட்டம் மற்றும் கிராமத்தினை சூஸ் செய்ய வேண்டும்.

3. மூன்றாவதாக புல எண் மற்றும் உட்பிரிவு எண் இருந்தால் அதில் என்டர் செய்யவும்.

4. மேலே மூன்று நிலைகளும் முடிந்த பின்னர் புலப்படம் பார்வையிட என்பதை சூஸ் செய்தால் உங்கள் நிலத்தின் வரைபடம் கீழே உள்ளது போல் காண்பிக்கும்.

FMB Sketch download

5. ஐந்தாவதாக உங்கள் வரைபடத்தில் உங்கள் நிலத்தின் புகைப்படம் காண்பிக்கும். மேலே உங்கள் மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண்கள், ஏரியா மற்றும் ஸ்கேல் போன்றவை இருக்கும்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: பட்டா எப்படி இருக்கும்