கிராம நிர்வாக அலுவலர் பணிகள் மற்றும் கடமைகள் Pdf மற்றும் சான்று pdf - கிராம நிர்வாக அலுவலர் என்றால் ஆங்கிலத்தில் வி ஏ ஓ ஆகும். ஒரு கிராமங்கள் என எடுத்துக்கொண்டால் முதலில் நமக்கு இவர் தான் ஞாபகம் வருவார். 300, 400 வீடுகள் அல்லது அதற்கு மேற்பட்ட குக்கிராமங்களை உள்ளடக்கியது இவர் பணிகள் ஆகும்.
இதையும் பார்க்க: கிராம நிர்வாக அலுவலர் சான்று pdf download
அங்கு அவர் வருவாய் வரி வசூல்கள், கிராம கணக்குகள், நிலவரி, கிராம ஊழியர்கள் சம்பளம், அடங்கல் நகல், சிட்டா நகல், சர்வே கற்கள், பொது சொத்துக்கள் பராமரித்தல், நலத்திட்டங்கள், வீட்டுமனை பட்டா, சான்றிதழ்கள் விநியோகம், புயல், வெள்ளம் மற்றும் நிவாரணம் குறித்த பணிகளை மேல் அதிகாரிகளுக்கு எடுத்துரைப்பது போன்ற விஷயங்களை மேற்கொள்வார்.
இவருடன் கிராம பணியாளர், கிராம காவலர் மற்றும் பாசன காவலர் என நான்கு அதிகாரிகள் மேற்கண்ட செயல்திட்டங்களை வழிவகுப்பார்கள். இவர்களும் வருவாய் துறையின் கீழ் உள்ள அரசு அதிகாரிகள் தான். ஒவ்வொரு ஆண்டும் 24 பதிவேடுகளை கிராம நிர்வாக அலுவலர் சமர்ப்பிக்க வேண்டும். இதனை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் இவர்கள் தணிக்கை செய்வார்கள். பசலி ஆண்டு எனப்படும் ஜூன் 01 ஆம் தேதி தொடங்கி ஜூலை 31 ஆம் தேதி வரையும் பராமரித்த 24 பதிவேடுகளை சமர்பிப்பார். இதனை ஜூலை 30 ஆம் தேதியன்று தணிக்கை செய்வார்கள். மொத்தமாக கிராம நிர்வாக ஆபிசர் இரண்டு வழியாக நியமனம் செய்யப்படுகிறார். ஒன்று தேர்வாணையம் மற்றொன்று தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீடு முறையில் நியமிக்கப்படுகிறார்கள்.
வருவாய் துறை அமைச்சர் பெயர் 2023
கிராம நிர்வாக தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள்
இதில் பகுதி நேரம் மற்றும் முழு நேரம் கிராம நிர்வாகிகள் வேலை செய்யும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் எனப்படும் Rti மனுக்களை நம்மால் அனுப்ப முடியும். அதில் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை பிரிவு 06 இன் கீழ் 1 யை பயன்படுத்தி உங்கள் மனுக்களை கொடுக்கலாம். ஒருவேளை நீங்கள் நேரடியாக சென்று மனுக்களை தர வேண்டுமென்றால் அரசாங்கம் விடுமுறையை தவிர்த்து எந்த நாட்களிலும் சென்று மனுக்களை தரலாம். ஒருவேளை உங்கள் மனுக்களை அவர்கள் வாங்க மறுத்துவிட்டால் வட்டாட்சியரிடமும் அல்லது மாவட்ட ஆட்சியரிடமும் உங்கள் புகார்களை கொடுக்கலாம்.
மண்டல துணை வட்டாட்சியர் பணிகள்