கிராம ஊராட்சி எண்ணிக்கை 2024

கிராம ஊராட்சி எண்ணிக்கை 2024 எத்தனை தமிழ்நாடு - தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மிகவும் முக்கியமானதாக கிராம ஊராட்சிகள் திகழ்கிறது. ஏனெனில் கிராமங்களில் தான் அதிகளவு மக்கள் வாழ்வதாலும் மற்றும் இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்கள் இருக்கின்றன. இருந்தபோதிலும் ஒவ்வொரு கிராம ஊராட்சியின் கீழ் 5 அல்லது 6 சிற்றூர்கள் காணப்படுகிறது. அதாவது 500 மக்கள்தொகை மற்றும் வருவாய்க்கேற்ப ஊராட்சிகள் பிரிக்கப்படுகின்றன. இதற்கு மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், வார்டு உறுப்பினர்கள் பணிகளை அந்தந்த ஊர்களுக்கு செய்வார்கள்.

கிராம ஊராட்சி எண்ணிக்கை 2024


இதற்கு அரசாங்கம் ஊராட்சி எழுத்தர் ஒருவரை நியமிப்பார்கள். இவர்கள் எல்லாம் மக்கள் பணிகளை செய்ய வேண்டும். அதிலும் ஊராட்சி மன்ற தலைவர் நிதி மூலம் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.

தற்போதைய நடைமுறையில் தலைவர் அவர்கள் வருடத்திற்கு ஆறு முறை வீதம் வரவு செலவு கணக்கினை கிராமத்தில் உள்ள மக்களுக்கும் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கும் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கிராமத்தின் ஆய்வாளராக கலெக்டர் அவர்கள் பணிபுரிவார்.

தமிழ்நாடு கிராம ஊராட்சி எண்ணிக்கை 2024

தற்போது வரையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 12, 525 கிராம ஊராட்சிகள் செயல்படுகிறது. ஒரு ஊராட்சிக்கு 10 முதல் 15 மன்ற உறுப்பினர்கள் வீதம் செயல் படுகின்றார்கள். மொத்த ஊராட்சி மன்ற வார்டுகளின் எண்ணிக்கை தற்போது 99, 327 ஆக தொடர்கிறது.

தமிழ்நாடு நகராட்சி எண்ணிக்கை 2024