கிராம பஞ்சாயத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி

கிராம பஞ்சாயத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி - வீட்டு மனை அங்கீகாரம் பெறுவது எப்படி என்றால் நகர ஊரமைப்பு இயக்ககம் சென்று வாங்க வேண்டும். பொதுவாக ஒரு வீட்டு மனைக்கு கண்டிப்பாக DTCP மற்றும் CMDA கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும். இது எதற்காக என்றால் அந்த மனையில் ஒழுங்கான மின்சார வசதி, பூங்கா, தண்ணீர் வசதி, சாலை வசதி மற்றும் அடிப்படை தேவைகள் இருந்தால் இந்த DTCP மற்றும் CMDA அப்ரூவல் கொடுப்பார்கள். இதற்கான கட்டணம் 2000 லிருந்து 5000 வரையும் வசூல் செய்யலாம்.

கிராம பஞ்சாயத்தில் வீடு கட்ட அனுமதி  பெறுவது எப்படி


வீடு கட்ட பிளான் அப்ரூவல் வாங்குவது எப்படி

கிராம பஞ்சாயத்தில் பிளான் அப்ரூவல் அவசியமா என்றால் கண்டிப்பாக அவசியம். கிராமத்தில் ஒரு வீடு கட்டுவதற்கு முன் அந்த இடத்தில் முதலில் பஞ்சாயத்து அப்ரூவல் வாங்குவது அவசியம். இதனை எளிமையான முறையில் கிராம பஞ்சாயத்து ஊராட்சி தலைவரிடம் அணுகினாலே உங்கள் வீட்டிற்கான மொத்த அப்ரூவல் வாங்கி விடலாம். இதற்காக ஆவணங்களை தயார் செய்து வைத்து கொள்ளவும். அப்படி என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிப்பது என்று கேட்டால் பட்டா, வில்லங்க சான்றிதழ், லே அவுட் போன்றவைகளை சமர்ப்பிக்க வேண்டும். சமீபத்தில் தான் உயர்நீதிமன்றம் பஞ்சாயத்தும் சி எம் டி ஏ வும் ஒன்று தான் என்று அறிக்கை விட்டுள்ளது.

தமிழ் இல் dtcp ஒப்புதல் சமீபத்திய செய்தி

சதுர அடி ஒன்றுக்கு dtcp ஒப்புதல் செலவு

ஒரு சதுர அடிக்கு வீடு சார்ந்த மனைகள் இருந்தால் ஐந்து ரூபாயும் வணிகம் சார்ந்த மனைகள் இருந்தால் பத்து ரூபாயும் வசூல் செய்வார்கள். இந்த கட்டணம் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு வேறுபடும்.