கிராம சபை கூட்டத்தில் கேட்க வேண்டிய கேள்விகள்

கிராம சபை கூட்டத்தில் கேட்க வேண்டிய கேள்விகள் - கிராம சபை கூட்டங்கள் வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே நடந்து கொண்டு இருந்தது. இதனை தமிழக அரசு விதி 110 இன் கீழ் ஆறாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி 26, மே 01, ஆகஸ்ட் 15, அக்டோபர் 02 இருந்த கிராம சபை கூட்டத்தை விரிவு படுத்தி உள்ளனர். அந்த இரண்டு தேதிகள் மார்ச் 22 மற்றும் நவம்பர் 01 ஆகும். இதில் உள்ள அனைத்து நாட்களும் அரசாங்கத்திற்கு உகந்த நாட்களாக இருக்கிறது. அப்படி என்னென்ன உகந்த தேதிகளாக இருப்பதை பின்வருவனவற்றுள் காண்போம்.

கிராம சபை கூட்டத்தில் கேட்க வேண்டிய கேள்விகள்


கிராம சபை கூட்டம் நடைபெறும் நாட்கள் 2022

1. ஜனவரி 26 - குடியரசு நாள்

2. மே 01 - உழைப்பாளர் தினம்

3. ஆகஸ்ட் 15 - சுதந்திர நாள்

4. அக்டோபர் 02 - மகாத்மா காந்தி பிறந்த நாள்

5. மார்ச் 22 - தண்ணீர் தினம்

6. நவம்பர் 01 - உள்ளாட்சி தினம்

கிராம சபை அதிகாரங்கள்

கிராம சபை என்றைக்கு நடக்கிறதோ அன்றைய தினமே அனைத்து ஊர்களிலும் நடைபெறும். இதனை கிராம ஊராட்சி ஒன்றிய தலைவர் அவர்கள் முன்னிலையில் நடைபெறும். ஒருவேளை அவர்கள் அன்றைய தினம் வராமல் இருந்தால் துணை தலைவர் பொறுப்பேற்று கொள்ள முடியும். அவரும் இல்லையென்றால் வார்டு தலைவர் அல்லது வாக்காள பெருமக்கள் யாரேனும் பொறுப்பேற்று கொள்ளலாம்.

கிராம சபையின் முக்கியத்துவம்

அப்படி என்னென்ன விஷயங்கள் அல்லது கேள்விகளை நாம் எழுப்பலாம் என்றால் கிராமம் சார்ந்த அரசாங்கத்தின் திட்டங்கள், நோக்கங்கள் என அனைத்தும் கேள்வி கேட்கலாம். இதில் எந்த வித கேள்விகளும் எழுப்பலாம். அவற்றினை ஊர் தலைவர் அவர்கள் நிராகரிக்க முடியாது. இவைகள் எல்லாம் நாடாளுமன்ற அதிகாரம் போன்று எடுத்து கொள்ளப்படும். இதனை தீர்மானிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.

கிராம சபை கூட்டம் 2022

கிராம சபை மனு சம்மந்தமான கேள்விகள்

1. வளர்ச்சி திட்டம்.

2. வேலைவாய்ப்பின்மை.

3. குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் அடிப்படை வசதி.

4. சென்ற வருடம் கிராம சபையினால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்கள் மற்றும் வரவு செலவு.

5. மருத்துமனைகள் தொடர்பான கேள்விகள், பிரச்சனைகள் அல்லது வசதி ஏற்படுத்தி தருவது.

6. முதியோர்களுக்கான திட்டங்கள்.

7. உணவுப்பொருள் வழங்கல் பிரச்சனைகள்.

குறிப்பு

மேலே கூறிய ஆறு வகையான கேள்விகள் மட்டுமே கேட்க வேண்டும் என்பதில்லை. இதன் போல் கேள்விகள் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்க முடியும். இதற்கு வரைமுறைகள் ஏதும் கிடையாது.

கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை நடைபெறும் ?

முதலில் நான்காக இருந்ததை அரசாங்கம் ஆறாக உயர்த்தி உள்ளது. இதனால் கூட்டங்களின் எண்ணிக்கை உயர்வதோடு மக்களின் பிரச்சனைகள் அதிக எண்ணிக்கையில் குறையவும் கிராம ஊராட்சி தலைவர் அவர்கள் எளிதில் பணிகளை முடிக்க கால அவகாசமும் அதிகளவில் இருக்கிறது.

தமிழ்நாடு மாவட்டங்கள் 2022