கிராமத்தில் வீடு கட்ட விதிமுறைகள் 2024

கிராமத்தில் வீடு கட்ட விதிமுறைகள் 2024 - வீடு என்பது எல்லோருக்குமே அவசியமான ஒன்று தான். சில பேர் வாடகை வீட்டில் இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அந்தளவு வீடு என்பது முக்கியமான ஒரு பங்காக அனைவருக்குமே அமைகிறது என்றால் அது நிஜமே. இன்றைக்கு மனைகள் வாங்குவது எவ்வளவு கஷ்டமோ அதே அளவு தான் வீடு கட்டுவதும் கஷ்டமே. ஏனெனில் மனைகளில் நிறைய நிறைய பிரச்சனைகள் குவிந்து கொண்டே வருகிறது. மோசடி பத்திரம், தவறான பத்திரப்பதிவு, கூட்டுப்பட்டா பிரச்சனை மற்றும் விடுதலை பத்திரம் பிரச்சனை என வாங்கும் மனைகளில் ஏராளமான பிரச்சனைகள் இன்று வந்து கொண்டே இருக்கிறது.

கிராமத்தில் வீடு கட்ட விதிமுறைகள்


அதேபோல் தான் இந்த வீடும். ஏனென்றால் வீடு கட்டும் முன்னர் அந்த இடத்திற்கு அங்கீகாரம் எனப்படும் டி டி சி பி வாங்குதல் அவசியம். அப்படி வாங்கிய பின்னர் நீங்கள் வீடு கட்டும் பிளான் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் அனுமதி பெற வேண்டும். அதில் உங்கள் வீடு கட்டும் வரைபடம், தள வரைபடம், மேல்தள வரைபடம், நான்கு புறமும் இடைவெளி என அனைத்தும் இருந்தால் தான் உங்கள் பிளான் அப்ரூவல் செய்யப்படும். கிராமப்புறங்களில் வீடுகளை கட்டும் மக்கள் பொதுவாகவே இதைப்பற்றி தெரிவதில்லை. அவர்கள் டி டி சி பி அங்கீகாரமும் பற்றியும் தெரிவதில்லை. இதனால் பின்னாளில் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும் என்பதே உண்மை. ஒரு சில நேரத்தில் அங்கீகாரம் மற்றும் உரிய வரைபடத்தின் ஒப்புதல் இல்லாமல் இருந்தால் அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யும் வாய்ப்பு மிக அதிகம்.

கிராம பஞ்சாயத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி

ஒரு மனையை வாங்கிய பின்னர் வீடுகளை கட்டும்போது நான்கு புறமும் இடைவெளி உங்கள் மனையில் விட வேண்டும். அதற்குப்பிறகு முழுவதுமாக வீட்டினை கட்ட முடியாது. சாலை வசதி, தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி போன்றவைகள் கண்டிப்பாக இருந்தால் தான் லேஅவுட் ஒப்புதல் தருவார்கள். நீங்கள் கொடுக்கப்போகும் வரைபடங்கள் அனைத்தும் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு எளிதாக அப்ரூவல் செய்து கொடுப்பார்கள்.

அனாதீனம் நிலம் என்றால் என்ன