கிராம நத்தம் நிலம் வாங்கலாமா ( கிராம நத்தம் தீர்ப்பு ) ( Can we buy grama natham patta land ) - இந்த கிராம நத்தம் சம்பந்தப்பட்ட கேள்விகள் நிறைய பேருக்கு இருக்கும். ஏனெனில் அரசு சார்ந்த நிலங்களை வாங்கினால் அந்த நிலம் கையகப்படுத்துமா என்கிற கேள்விகள் மக்கள் மனதில் எப்போதும் எழும்.
இதையும் படிக்க: EC patta
கிராம நத்தத்தை பொறுத்தவரையில் அரசு நிலமாகவே கருதப்படுகின்றது. பட்டா நிலங்களை காட்டிலும் அதிகளவு மக்கள் கிராம நத்த நிலங்களில் தான் வீடுகளை கட்டுகின்றனர்.
கிராம நத்தம் தீர்ப்பு
2013 ஆம் ஆண்டு நீதிமன்றம் கிராம நத்தம் நிலங்களை பற்றி ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில் கிராம நத்த நிலங்களை அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் அப்படி எடுத்த நேர்ந்தால் உரிய இழப்பீட்டினை கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கிராம நத்தத்தில் வீடுகளை மட்டும் கட்டி வாழ வேண்டும். வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த கூடாது எனவும் அல்லது வேறு எங்காவது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் அந்த நிலமும் வணிக நிலமாகவே கருதப்படும் என்றும் தெரிவித்தார்கள். மேலும் இந்நிலங்கள் ரயத்துவாரி நிலமும் என்றும் அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.
கிராம நத்தம் நிலம் வாங்கலாமா வேண்டாமா
நிச்சயம் வாங்கலாம். ஆனால் குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டும் இருந்தால் வாங்கலாம்.
இதையும் பார்க்க: நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி