கிராம நிர்வாக அலுவலர் சான்று pdf download - வருவாய் கிராமத்தில் உள்ள மொத்த ஊர்களையும் இவர் தான் பார்த்து கொள்வார். அதாவது சிற்றூர்களில் வருவாய், மக்கள் தொகை, சட்டம் ஒழுங்கு, பயிராய்வு, நில வரி சான்று, வருவாய் சம்பந்தப்பட்ட அனைத்து சான்றுகள் பரிசீலினை, 24 வகையான கிராம கணக்குகள் என பல்வேறு வகையான கோப்புகளை இவர் தான் பார்த்துக்கொள்வார்.
மேற்கண்ட வேலைகள் மட்டுமல்லாம் மேலும் பல சான்றுகளை இவர் தான் கொடுப்பார். உதாரணமாக ஒருவர் ஒரு ஆதாரம் கூட இல்லாமல் இருந்தாலும் ஆளறி சான்று, இவர் இங்கு தான் உள்ளார் என்கிற சான்று எல்லாம் இவர் தான் பரிசீலினை செய்து முடிப்பார்.
இதையும் பார்க்க: கிராம நிர்வாக அதிகாரி தொடர்பு எண்கள்
மேலும் எவ்வவகை ஆவணம் வேண்டுமென்றாலும் தற்போது Tnesevai வாயிலாகவே கிடைக்கும் வசதி உள்ளது. அதனால் பயனாளிகள் எல்லாம் மேற்கண்ட வெப்சைட்டினை பயன்படுத்த வேண்டும். ஆன்லைனில் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் நேரடியாக கிராம நிர்வாக அலுவலகம் சென்று கேட்டு பூர்த்தி செய்து கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூபாய் 60 மட்டுமே. மேலும் அந்த சான்று 30 நாட்களுக்குள் வந்து சேரும்.
இதையும் பார்க்க: முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு