கிராம பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு - உள்ளாட்சி அமைப்புகள் மொத்தம் இரு வகைப்படும். அவைகள் நகரம் மற்றும் கிராமம் ஆகும். இவ்விரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. ஒரு மாவட்டம் என்று எடுத்து கொண்டால் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகள் இருக்கிறது. இதில் அதிகப்படியான ஊராட்சிகள் இருப்பது கிராம பஞ்சாயத்துகள் தான். தமிழ்நாட்டில் 12, 524 க்கும் கிராம ஊராட்சிகள் செயல்பாட்டில் உள்ளது.
இந்த கிராம ஊராட்சிகளையும் மக்கள் தொகைக்கேற்ப பிரித்து கொள்கின்றனர். உதாரணமாக 0 - 500, 500 - 1000, 1000 - 2000, 2000 - 5000 என பிரித்து கொள்கின்றனர். நான்கு முதல் பத்து ஊர்களை கொண்டது ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.
கிராமத்திற்கு வருவாயாக சொத்து வரி, தண்ணீர் வரி, கடைகளுக்கு விதிக்கப்படும் வரி, கட்டிட அனுமதி கட்டணம் போன்றவைகள் வருவாயாக உள்ளது. இதனை கொண்டு சாலை பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், குடிநீர் வசதி செய்தல் மற்ற இதர விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
இதையும் பார்க்க: சொத்து வரி online payment
இதனை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசாங்கம் அவ்வப்போது நிதி மானியம் கொடுப்பார்கள். 2022 ஆம் ஆண்டில் ஊராட்சிகளுக்கு மட்டும் 822 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதில் கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் ரூபாய் 662 கோடி ரூபாய் நிதி மானியம் பெறப்பட்டது என்று ஊரக வளர்ச்சித்துறை கூறியுள்ளது.
இதையும் பார்க்க: பஞ்சாயத்து அங்கீகரிக்கப்பட்ட நிலத்திற்கு dtcp அனுமதி எப்படி