இடத்தின் மதிப்பு - இடத்தின் மதிப்பை நாம் கண்டறிவது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது என பலர் சொல்லி கேட்டு இருப்போம் அல்லது அவர்கள் சொல்லும் பாணி நமக்கு புரியாது. தினம் தினம் இடம் அல்லது நிலத்தின் விலை மாறிக்கொண்டே இருக்கும். முக்கிய பெரு நகரங்களில் அதிகமாகவும் கிராம புறங்களில் குறைவாகவும் அல்லது இடத்தின் நிலைமை பொருத்து மாறுபடலாம். நீங்கள் ஒரு இடத்தை வாங்குவீர்கள் என்றால் அவ்விடத்தின் வழிகாட்டு மதிப்பு, முத்திரைத்தாள் கட்டணம், வில்லங்கம் ஆகியவற்றை நாம் கட்டாயம் பார்க்க வேண்டும். இல்லையென்றால் கொஞ்சம் சிரம பட வேண்டி இருக்கும்.
நீங்கள் உங்கள் ஊர்களின் சரியான வழிகாட்டு மதிப்பு வேண்டுமாயின் ஒரிஜினல் வெப்சிட்ற்கு சென்றால் மட்டுமே அதன் பதில் கிடைக்கும். ஏனெனில் இடைத்தரகர்கள் மற்றும் மோசடி பத்திரப்பதிவுகளை கட்டுப்படுத்தவே அரசு இது போன்று நல்ல செயல்களை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கிறது. ஆன்லைனிலில் அப்டேட் செய்திருக்கும் விலையே மனையின் விலையாக நிர்ணயம் செய்கிறார்கள்.
எடுத்துக்காட்டு 1
ஒருவர் ஒரு நிலத்தை ரூபாய் 2, 00, 000 என வாங்குகிறார். ஆனால் Tnreginet வழிகாட்டி மதிப்பு போட்டு பார்த்தால் அதன் விலை ரூபாய் 50,000 மட்டுமே கணக்கிடப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகும் ?
விலையை நிர்ணயிப்பது மனையின் சொந்தக்காரர் மட்டுமே. இப்போது ரூபாய் 50, 000 க்கு அவர் பதிவு செய்தால் ஒட்டுமொத்தமாக 5, 500 மட்டுமே வரும் ( பதிவுக்கட்டணம் மற்றும் முத்திரை தீர்வை சேர்த்து ). அதனால் பதிவு செய்பவருக்கு லாபமே. இதனை சொத்து வாங்குபவரும் அல்லது சொத்து விற்பவரும் சேர்ந்து எடுக்கும் முடிவே ஆகும்.
Patta Chitta