இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் 2024 ( ilavasa thaiyal iyanthiram 2024 form ) - இலவசமாக தையல் வழங்கும் திட்டத்தினை ஆரம்பத்தில் மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து தான் ஆரம்பித்தது. இன்றும் அதே போல் தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு அதனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என்றும் அழைப்பர். இதன் காரணமாகவே தான் இந்த பெயரும் வந்தது குறிப்பிடத்தக்கது.
இலவச தையல் இயந்திரம் விண்ணப்பம் Padivam Pdf
இந்த விண்ணப்பங்கள் ஆன்லைனிலும் மற்றும் நேரிலும் சென்றும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நேரில் சென்று விண்ணப்பிப்பது நல்லது. ஏனென்றால் 2020 விண்ணப்பங்கள் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கும் சூழ்நிலை தற்போது உள்ளது. ஆனாலும் இந்த விண்ணப்பங்களும் நீங்கள் கொடுக்கலாம் ரிஜெக்ட் ஆகாது. இருந்தாலும் 2022 விண்ணப்பங்கள் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை. ஒருவேளை ஆன்லைனில் அப்டேட் செய்திருந்தால் இந்த பக்கத்தில் கூடிய விரைவில் எந்த வித தாமதமின்றி அப்லோட் செய்யப்படும்.
தமிழக அரசின் இலவச திட்டங்கள் 2024
இலவச தையல் மிஷின் விண்ணப்பம் Pdf
யாரெல்லாம் இதற்கு தகுதியானவர்கள் என்று பார்த்தால் விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், நலிவடைந்தோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டமானது பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் ஆண்களுக்கு இல்லை. மேலும் மற்ற பெண்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தாலும் அப்ளை செய்யலாம். இதற்காக மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள், புகைப்படம், வருமான சான்றிதழ் மாதம் 12, 000 வரையும் தான் இருக்க வேண்டும். ஏற்கனவே வாங்கி இருந்தால் அவர்களுக்கு 7 வருடங்களுக்கு கிடைக்காது. ஆதார் அட்டை. அட்ரஸ் அட்டை ஏதாவது, தையல் பயிற்சி சான்றிதழ் மிகவும் கட்டாயம். இதனை தவிர்த்து ரேஷன் அட்டை, இருப்பிட சான்று மற்றும் உங்கள் கையொப்பம். உங்கள் கையொப்பத்தில் அட்டெஸ்டெட் செய்திருக்க வேண்டும்.
அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள்
இந்த விஷயங்கள் அனைத்தும் அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் ஏதோ ஒன்று தவறு அல்லது இல்லை என்றாலே உங்கள் விண்ணப்பம் எளிதில் ரிஜெக்ட் ஆகுவதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது. இதனை சம்மந்தப்பட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் கேட்டு அதனை பூர்த்தி செய்து ஓரிரு நாட்களுக்குள் கொடுத்து விடவும். அப்படி உங்கள் விண்ணப்பம் ஓகே ஆகி இருந்தால் உங்களுக்கான மிஷின் வந்துவிடும். நீங்கள் சமூக நலத்துறைக்கு அவவ்போது சென்று விசாரிக்கவும்.