இந்திய அரசியலமைப்பு எத்தனை முறை திருத்தப்பட்டது 2024 - ஒவ்வொரு நாட்டிற்கும் அடிப்படை சட்டம் ஒன்று உள்ளது. அப்படி தான் இந்தியாவிற்கு அடிப்படை கட்டமைப்பு, உரிமை போன்றவைகளை வழிவகுக்க இந்த அரசிலையமைப்பு சட்டம் உதவுகிறது. குடியரசு தலைவர் முதல் கிராம ஊராட்சி மன்ற தலைவர் வரையும் உள்ள உறுப்பினர்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது இந்த அரசியல் அமைப்பு ஆகும். இதன் முழு நோக்கமே சாதாரண மக்களுக்கும் அடிப்படை உரிமை மற்றும் மற்ற திட்டங்கள் எளிமையாக கிடைப்பதற்காக தான்.
முதன் முதலில் இந்தியாவிற்கு அரசியலமைப்பு சட்டம் வேண்டும் என்று திரு. எம். என். ராய் அவர்கள் 1934 இல் கோரிக்கை விடுத்தார். பிறகு 1946 அமைச்சரவை தூது குழுவானது கூட்டமைப்பு வைக்க ஏற்பாடு செய்தது. இந்த அமைச்சரவு என்பது தற்போது செயல்படும் பாராளுமன்றம் போல் இருக்கும். இதில் உள்ள 296 நபர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவில் உட்காரப்பட்டார்கள். மற்ற உறுப்பினர்கள் சீப் கமிஷன் மாகாணங்கள், சுதேசி மன்னர்கள் மூலம் செலக்ட் செய்யப்பட்டார்கள். ஆக மொத்தமாக 389 உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்க பட்டார்கள். இறுதியாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு நிர்ணயம் செய்தார்கள். பிறகு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முழுமையாக இந்திய அரசு அரசியலமைப்பு சட்டம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
திருத்தங்கள்
முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு 1951 ஆகும். இதுவரை அரசியலமைப்பு சட்டமானது 105 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் ஆண்டு 10 ஆம் நாள் திருத்தம் செய்யப்பட்டது. இதேபோல் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை முதன்முதலில் எப்போது திருத்தம் செய்யப்பட்டது என்றால் 1976 ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின் படி செய்யப்பட்டது. இதன் முகவுரை மட்டும் ஒருமுறை திருத்தம் செய்துள்ளது. ஒரு சட்டம் திருத்துவதற்கு 368 யை பயன்படுத்தி திருத்தலாம். ஆனால் அதனை நடைமுறை கொண்டு வர அவ்வளவு சுலபம் இல்லை.
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன 2024