இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் 2024 - வங்கியை பற்றி இங்கு யாருமே தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சேமிப்பு திட்டங்கள் அதிகமாக நாம் வங்கிகளில் தான் வைத்திருப்போம். பொதுவாக ஒருவர் வங்கி கணக்கு வைத்திருக்கிறார் என்றால் சேமிப்பு, வட்டி அல்லது லோன் இவைகளுக்காக தான் கணக்கை தொடங்குவார்கள். நீங்கள் எந்த வங்கியின் கீழ் கணக்கு வைத்திருந்தாலும் அது இந்திய அரசின் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்படும். இதனை நடுவண் அரசு எனலாம். இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ம் தேதி ஆரம்பித்தார்கள். முதலில் கொல்கத்தாவிலும் பிறகு மும்பையிலும் ஆரம்பித்தார்கள். தற்போது அமைந்துள்ள இடம் ( தலைநகரம் ) மும்பை, மகாராஷ்டிரா ஆகும். முதலில் ஆரம்பித்த இந்த பேங்க் தனியாரால் ஆரம்பிக்கப்பட்டது. இறுதியாக 1949 ஆம் ஆண்டு இதனை தேசியமாக்கப்பட்ட வங்கி என ஆனது.
வங்கிகளின் வகைகள்
1. நடுவண் வங்கி
2. இந்திய பொதுத்துறை வங்கிகள்
3. தனியார்துறை வங்கிகள்
4. கூட்டுறவு வங்கிகள்
5. வெளிநாட்டு வங்கிகள்
6. மண்டல ஊரக வங்கிகள்
7. பேமெண்ட் வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கியின் சின்னம் சிங்கமும் பனைமரமும் உள்ள ஒரு கிழக்கு இந்திய கம்பெனியின் முத்திரை தான் நமது நடுவண் வங்கி உபயோகித்த சின்னமாகும். ஒரு சிலருக்கு சந்தேகங்கள் எழலாம். சின்னத்தில் உள்ள மரம் எது என்று இதற்கு சரியான விடை பனை மரம் ஆகும்.
நாளை வங்கிகள் இயங்குமா
பணிகள்
1. இந்திய நாணயம் மற்றும் தாள்களை அச்சிடுதல்
2. அன்னிய செலவாணி நிர்ணயித்தல்
3. நிதியமைப்பு
4. கொடுப்பு முறைகள் செயல்படுத்துதல்
5. பழைய தாள்களை மாற்றுதல்
6. நிதிக்கொள்கைகளை மேற்கொள்தல்.
தற்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் யார்
இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் சர். ஓஸ்போர்ன் ஸ்மித் அவர்கள் 1935 ஆம் ஆண்டு பதவி வகித்தார். தற்போதைய ஆளுநர் பெயர் சக்திகாந்த தாஸ் அவர்கள் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதியில் இருந்து பதவி வகித்தார். துணை ஆளுநர் திரு சங்கர் அவர்கள். இந்த பேங்க் நான்கு மண்டலங்கள், ஐந்து துணை மண்டலங்கள் மற்றும் 22 வட்டார அலுவலகங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
வங்கி விடுமுறை 2024 தமிழ்நாடு பட்டியலில்