இந்தியாவின் ஆளுநர் யார் 2024 - மத்திய அரசுக்கு என்று தனியாக ஆளுநர்கள் யாரும் நியமனம் செய்யமாட்டார்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆளுநர் வீதம் நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்த கவர்னர் பற்றிய தகவல்கள் பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி ஆறில் சரத்து 153 முதல் 162 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நியமனம், பதவி காலம், பதவி பிரமாணம், பணி மற்றும் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் ஆளுநரை நியமிப்பவர் யார்?
இவர்களை இந்திய குடியரசுத்தலைவர் அவர்கள் தான் நியமனம் செய்கிறார்கள். ஆனால் ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது யார்? என்றால் உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் தான். இவர் இல்லாத சமயத்தில் மூத்த நீதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து வைப்பார்கள்.
தமிழ்நாடு அமைச்சர் பட்டியல் 2024 Pdf
பணிகள்
என்னதான் இவருக்கு கவர்னர் பதவி இருந்தாலும் இவர் பெயரளவில் மட்டுமே நிர்வாகத்தை பார்த்துக்கொள்வார். மேலும் செயல்திட்டங்களை வழிவகுத்தல் இவரின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். முக்கியமாக சட்டப்பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களில் இவரின் கையெழுத்தும் ஒப்புதலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவரின் பதவிக்காலங்களை நீட்டிக்கவும், குறைக்கவும், பணியில் இருந்து நீக்கவும் இவரை நியமனம் செய்த மாண்புமிகு திரு. ஜனாதிபதி அவர்களுக்கு முழு உரிமை உண்டு.
இந்தியாவின் தற்போதைய கவர்னர் யார் 2024
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு மட்டும் தான் ஆளுநர்கள் இருக்கிறார்கள். மற்றபடி மற்ற மத்திய அரசு பணிகளை போல் இதற்கு கிடையாது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் 2024