இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் 2024

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் 2024 - நம் இந்திய நாடு 132 கோடி மக்கள் தொகை கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 28 வகையான மாநிலங்கள் இருப்பதை அனைவரும் அறிந்ததே. அது என்ன மிகப்பெரிய மாவட்டம் என்றால் ஆமாம் அது எப்படி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை போன்ற மாவட்டங்கள் உள்ளதோ அதேபோல் மற்ற மாநிலங்களில் இருப்பது வழக்கம். அப்படி குஜராத் மாநிலத்தில் கச்சு வளைகுடாவில் அமைந்துள்ள கச்சு மாவட்டம் தான் இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டமாக தற்போது வரை உள்ளது. 2011 ஆண்டு நிலவரப்படி, அங்கு 20 லட்சம் மக்களே வாழ்ந்து வந்தாலும் 45, 652 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளமையால் இது இந்திய மாவட்டங்களில் பெரிய மாவட்டமாக இன்றும் திகழ்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் 2024


மொத்த பரப்பளவில் கிட்டத்தட்ட முப்பது சதவீதம் மக்களே அதில் வாழ்ந்து வருகின்றனர். ஆறு சட்டமன்ற தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் கச்சில் உள்ளது. அங்கு சிந்தி, குஜராத்தி மொழிகள் அதிகமாக பேசப்படுவதால் குஜராத்தி மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் பூஜ் ஆகும்.

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார்

வருவாய் வட்டங்கள் பத்திற்கும் மேலே காணப்படுகிறது. அங்குள்ள மக்கள் பழுப்பு நிலக்கரி தொழிலை மேம்படுத்தி வருகின்றனர். உணவில் பால், மோர், வெண்ணை போன்றவைகளை சேர்த்து கொள்கின்றனர்.

இந்தியாவில் எத்தனை மாவட்டம் 2024 உள்ளது

2011 ஆம் ஆண்டு வரையில் 640 இருந்த இந்தியாவின் மாவட்டங்களானது 2020 மார்ச்சில் 739 ஆக மாறியது. இந்த கணக்கு தற்போது உயர்ந்துள்ளது என்றே சொல்லலாம். ஆகஸ்ட் 2022 ரிப்போர்ட் படி, தற்போது 766 மாவட்டங்கள் இந்தியாவில் காணப்படுகிறது. அதிக மக்கள்தொகை அடிப்படையில் தானே மாவட்டமும் குறைந்த மக்கள்தொகை அடிப்படையில் மேல் டிபாங் மாவட்டமும் உள்ளன.

இந்திய அரசியல் சட்ட சரத்து 41 கூறுவது