இருப்பிட சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் - வருவாய் துறையினர்களால் மிகவும் முக்கியமான ஆவணமாக இந்த இருப்பிட சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. ஒருவரின் இருப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணமாக இது இருப்பதால் ஒரு முக்கிய ஆவணங்களில் இருப்பிட சான்றிதழும்இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
முன்னர் எல்லாம் இருப்பிட சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டும். ஆனால் தற்போது இ சேவை மையம் மூலம் அப்ளை செய்யும் வசதியை வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.
இதையும் காண்க: Tamilnilam
1. இ சேவை மூலம் அப்ளை செய்வதாக இருந்தால் முதலில் கேன் number ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும்.
2. பிறகு இதற்கு முக்கிய ஆவணமாக உள்ள புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவை கொடுத்தால் போதுமானது.
3. உங்கள் விண்ணப்பத்தினை வி ஏ ஓ பரிசீலினை செய்த பின்னர் வருவாய் ஆய்வாளர் மேற்பார்வையிட்டு இறுதியாக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அதனை உறுதிப்படுத்துவார்.