இருப்பிட சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் - இருப்பிடம் என்பது மக்கள் வாழக்கூடிய ஒரு பகுதி, வீடு அல்லது வசிப்பிடம். இவர் இந்த இடத்தில் தான் உள்ளார் என்பதற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய ஒரு ஆவணம் தான் இந்த இருப்பிட சான்றாகும்.
விடுநர்
மனுதாரர் பெயர்,
விலாசம்.
பெறுநர்
உயர்த்திரு. வட்டாட்சியர் அவர்கள்,
முகவரி.
பொருள்: இருப்பிட சான்று வேண்டி விண்ணப்பம்
மதிப்பிற்குரிய ஐய்யா,
நான் இந்த இடத்தில் சுமார் 10 ஆண்டுகள் மேலாக வசித்து வருகின்றேன். நான் வேலையில் சேர்வதற்காக இருப்பிட சான்று தேவைப்படுகிறது. இதர ஆவணங்கள் இருந்தாலும் இருப்பிட ஆவணமாக அங்கு தேவைப்படுகிறது. இதனால் தாங்கள் எனக்கு இருப்பிட சான்றிதழ் வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதையும் காண்க: Patta Chitta
இணைப்பு
1. ஆதார் அட்டை
2. புகைப்படம்
3. குடும்ப அட்டை.
தற்போது விண்ணப்பம் எழுதாமல் நேரடியாக இ சேவை மையம் மூலமாகவே அப்ளை செய்யும் வசதியை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.